search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poisoning"

    • தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.
    • குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மொடக்குறிச்சி அடுத்த வேளாங்காட்டு வலசு, வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (32). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி திவ்யா (26). இவர்களுக்கு 2½ வயதில் ரோகித் என்ற மகனும் உள்ளார்.

    இந்நிலையில் குடும்பத் தகராறில் நேற்று இரவு திவ்யா எலி மருந்தை குடித்து தனது மகன் ரோகித்துக்கும் எலி மருந்தை கொடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை ரோகித் பரிதாபமாக இறந்தான்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் விஜயகுமார் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு அரசு மருத்துவமனையில் திரண்டனர். குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்ய கூடாது என்று கூறி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    தொடர்ந்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு உள்ளனர். இந்நிலையில் திவ்யாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டியை அடுத்த சிறுகிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துலிங்கம் (வயது 80), முத்துலிங்கம் கடந்த சிலநாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தியடைந்த முத்துலிங்கம் கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார். இதனால் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்து அவரை மீட்டு பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகசேர்த்தனர்.

    மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனிக்காமல் முத்துலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது.
    • உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் செய்யலாம்.

    விஷம் குடித்தவரை முதலில் சுத்தமான காற்றுள்ள பெரிய இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எல்லோரும் சுற்றி நின்று அவர் சுத்தமான காற்றை சுவாசிக்க விடாமல் தடுக்க கூடாது. விஷம் குடித்து படுத்திருப்பவர் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்று உங்களால் முடிந்தவரை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். மூச்சு விடுகிறாரா, மார்பு சுருங்கி விரிகிறதா, இருமல் எதுவும் இருக்கிறதா, கண் திறந்து மூடுகிறாரா, வாய் திறந்து மூடுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். உயிர் மீட்பு சுவாச முதலுதவி தேவைப்பட்டால் அதை செய்யலாம்.

    விஷம் குடித்தவரின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது? அறிகுறி என்னென்ன இருக்கிறது? என்ன விஷம் குடித்தார் என்று அவரால் சொல்ல முடிகிறதா? விஷம் உடலினுள் சென்றதனால், அவர் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்னென்ன? விஷம் குடித்தவரின் வயது என்ன? என்ன மாதிரி விஷம் குடித்திருப்பார்? எவ்வளவு அளவு விஷம் குடித்திருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    விஷம் குடித்தவருக்கு உள்ள அறிகுறிகள்:

    உதட்டைச் சுற்றி, வாயைச் சுற்றி சிவந்து இருக்கலாம். மூச்சு விடுவதை முகத்துக்கு கிட்டே சென்று முகர்ந்து பார்த்தால், என்ன வாசனை அடிக்கிறது என்பதை வைத்து என்ன பொருளைக் குடித்திருப்பார் என்பதை ஓரளவு கணிக்கலாம். மூச்சுத்திணறல், வலிப்பு அமைதியின்மை, ஞாபக மறதி, மயக்கம், பேச்சு உளறல், பேச்சில் தடுமாற்றம், மனநிலை குழப்பம் போன்றவற்றில் ஏதேனும் சில அறிகுறிகள் இருந்தால் விஷத்தின் பாதிப்பு உடலில் ஏறி இருக்கிறது என்று அர்த்தம். இந்த மாதிரி சூழ்நிலையில் விஷம் அருந்தியவரை உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் கொண்டு செல்வது தான் நல்லது.

    • சேலம் அம்மாபேட்டை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ராமாயி வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியிடம் கூறியுள்ளார்.
    • இதனால் மனமுடைந்த ராமாயி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த வேலு மனைவி ராமாயி (72). இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டை அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்று விட்டார். இருப்பினும் அதே வீட்டில் குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் வீட்டை வாங்கியவர் வீட்டை காலி செய்யுமாறு மூதாட்டியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ராமாயி சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராமாயி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன.
    • ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், வ.உ.சி நகர், கரைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில நாட்களாக அங்கு சுற்றித் தெரியும் தெரு நாய்கள், திடீரென மர்மமான முறையில் இறந்து போய் உள்ளன. மர்மமான முறையில் தெரு நாய்கள் இறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அக்கம் - பக்கம் வீதிகளில் விசாரித்த போது அந்தப் பகுதிகளிலும் இதே போல தெரு நாய்கள் மர்மமான முறையில் இறந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து வ.உ.சி. நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:- எங்களது பகுதியில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரியும், வீடுகள் தோறும் அவைகளுக்கு உணவு வைப்பார்கள். அதனை உண்டு விட்டு தெருக்களில் சுற்றித் திரியும். இரவில் அங்குள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பாக இருந்தன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் அந்த நாய்கள் இறந்து கிடந்தன. தற்போது எங்கள் பகுதியில் ஒரு தெரு நாய் கூட இல்லை. இருந்த அனைத்து நாய்களுமே மர்மமான முறையில் கொல்லப்பட்டு விட்டன என்று தெரிவித்தார்.

    மற்றொருவர் கூறுகையில், எங்கள் வீட்டில் 2 நாய்கள் வளர்த்து வந்தோம். மாலை நேரங்களில் தெரு நாய்களுடன் சேர்ந்து விளையாடிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து விடும். இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வந்த நாய் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தது. இதையடுத்து அதனை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றோம். அங்கு அது இறந்து விட்டது. இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், கொடிய விஷம் கலந்த உணவை சாப்பிட்டுள்ளது. அதனால் தான் உடனே இறந்து விட்டது என்று தெரிவித்தனர். நான் அதனை எங்கள் வீட்டுக்கு அருகே அடக்கம் செய்துவிட்டு வந்தபோது எங்கள் பகுதியில் இருந்த சுமார் 15க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போய் விட்டதாக அக்கம் - பக்கம் உள்ளவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே நாய்கள் இறப்பு குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் கொடிய விஷம் வைத்து நாய்களைக் கொன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்து போன சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 108 ஆம்புலன்சு உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள முதலிப்பட்டிைய சேர்ந்தவர் சமுத்திரகனி. இவரது மகன் சண்முககனி(வயது29). இவர் 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்முககனி தான் ஒரு பெண்ணை காதலிப்ப தாகவும் திருமணம் செய்து வைப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

    அதற்கு அவர்கள் சிறிது காலத்திற்கு பின் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சண்முககனி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.
    • பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2013-ம் ஆண்டு நடத்த முற்பட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த கலப்பு திருமணம் தம்பதியினரை கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த தம்பதியினர், தங்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர். காதல் கலப்பு திருமணம் செய்ததால் தான் இவ்வாறு செய்கின்றனர் என்று கிராமத்தை சேர்ந்த 22 பேர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

    வழக்கு நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் கிராம மக்கள் நாங்கள் கோவிலுக்கு வரும் யாரையும் தடுக்கவில்லை.

    மேலும் இது அனைவருக்குமான கோவில் தனிப்பட்ட நபர் அவருடைய சொந்த வெறுப்புகளின் காரணமாக தவறான வழக்கு தொடுத்துள்ளார் என கிராம மக்கள் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையில் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது.

    அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி கோவில் இந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்துவது என முடிவெடுத்துள்ளனர். இதற்காக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அதிக அளவில் தொடர்ந்து கும்பாபிஷேக நிகழ்வுகளுக்கான வேலைகளை செய்து வந்தனர்.

    இந்நிலையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலப்பு திருமணம் செய்த தம்பதியினரிடம் வரி வாங்கவில்லை என்றும், தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விட்டதாக பொம்மிடி போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பொம்மிடி போலீசார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கோவில் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி வழங்க முடியாது விழா ஏற்பாடுகளை நிறுத்தி வையுங்கள் என்று கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்ற மகிழ்ச்சியில் பணிகளில் ஈடுபட்டு வந்த பெண்கள் கலப்பு திருமணம் செய்தவர்களால் கோவில் கும்பாபிஷேகம் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டதை தாங்க முடியாமல் மனம் உடைந்து கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து நேற்று இரவு ஊர் நடுவில் பாயாசத்தை காய்ச்சினர்.

    பின்னர் அவர்கள் அதில் செடிக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கலந்து கிராம மக்களில் 6 பேர் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். உடனே போலீசார் தடுக்க முயன்றனர்.

    அதற்குள் அந்த பாயசாத்தை வேப்பமரத்தூரைச் சேர்ந்த ராமு (வயது35), கவிதா (35), அமுதா (35), அலமேலு, விஜயா, தேன்மொழி ஆகிய 6 பேர் குடித்துள்ளனர்.

    இதனால் பதறிப்போன போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூச்சி மருந்து குடித்த 6 பேரையும் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேரையும் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி மற்றும் தருமபுரி தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    இச்சம்பவத்தால் அக்கிரமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இந்த நிலையில் சதானந்தன் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார்.
    • இதனால் அவரை மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்தனர்.

    சேலம்:

    சேலம் கொண்டலாம் பட்டி புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சதானந்தன் (வயது 59). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சதானந்தன் கடந்த சில நாட்களாக தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்துள்ளார். இதனால் அவரை மனைவி மற்றும் மகன்கள் தடுத்து வந்தனர்.

    நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்றவர் விஷம் குடித்த நிலையில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். இன்று அவரது உடல் பிரேதபரி சோதனைக்கு பின் உறவின ர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
    • கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள குறிச்சியார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பொன்சிவா (வயது 25). இவர் அங்குள்ள ஒரு கல்குவாரியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கிழக்கு தெரு உள்ள அம்மன் கோவிலில் 2 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதனால் பொன் சிவா வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனைஅவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பொன்சிவா விஷம்குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பொன் சிவா உயிரிழந்தார்.

    இதுகுறித்து கீழராஜகுலராமன் போலீஸ்நிலையத்தில் பொன்சிவாவின் தாய்மாமன் இருளப்பன் கொடுத்த புகாரின் போரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் உடல் வலி காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
    • குருணை மருந்தை நேற்று குடித்தார். அப்போது வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நன்செய் இடையாறு மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 73). இவர் உடல் வலி காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இருப்பினும் உடல் வலி சரியாகாததால் அவதியில் இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். உடல் வலி குணமாகாததால் விரக்தியில் இருந்த ராஜகோபால், வீட்டில் இருந்த குருணை மருந்தை நேற்று குடித்தார். அப்போது வயிறு எரிச்சல் ஏற்படவே சத்தம் போட்டுள்ளார்.

    சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ராஜகோபால் உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
    • கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தனது உடலை பரிசோதனை செய்தார். ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், அதே போல் உடலில் ரத்த அழுத்த அளவும் அதிகமாக இருப்ப தாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் செல்வராஜ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் போது நான் சீக்கிரமாக செத்து விடுவேன் என்று புலம்பிக்கொண்டிரு ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.

    பின்னர் வீட்டிற்கு சென்று தனது மனைவி மல்லிகாவிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சை க்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது. அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற் கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செல்வராஜின் மனைவி மல்லிகா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே யுள்ள வடக்கு ஆத்திபட்டி பெத்தம்மாள் நகரை சேர்ந்தவர் சாந்தி(வயது55). இவரது மகன் சீனிவாசன் கோவையில் கால் டாக்சி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    குடும்ப தேவைக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள நிதி நிறுவனத்திடம் சாந்தி ரூ.5 லட்சம் கடன் பெற்றதாக தெரிகிறது. இதுவரை ரூ.1 லட்சம் செலுத்தியிருந்த சாந்தி அதன் பின் சரியாக தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக நிதி நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும் சம்பவத்தன்று சாந்தி வீட்டில் நிதி நிறுவனம் நோட்டீஸ் கொடுத்துவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மன வேதனை யில் இருந்த சாந்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சாந்தி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அருப்புக் கோட்டை தாலுகா போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×