பொக்லைன் ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே பொக்லைன் ஆபரேட்ட ராக வேலை பார்த்து வந்த தனசேகரன், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செட்டுக்காரன் குட்டை அருகே விஷம் குடித்த நிலையில் சாலையோரமாக இறந்து கிடந்தார்.
பொக்லைன் ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கீரம்பூர் அருகே அப்பி நா யக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் தனசேகரன் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகவில்லை.

பொக்லைன் ஆபரேட்ட ராக வேலை பார்த்து வந்த தனசேகரன், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் அவரது பெற்றோர் தனசேகரனை திட்டினர்.

இதனால் மனம் உடைந்த அவர், தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள தனியார் நூல் மில்லில் இருந்து சுண்டக்காம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செட்டுக்காரன் குட்டை அருகே விஷம் குடித்த நிலையில் சாலையோரமாக இறந்து கிடந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து, தனசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com