search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை
    X

    அரசு பள்ளி ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை

    • வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார்.
    • கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா குன்னமலை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49). இவர் வாவிபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மல்லிகா (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் செல்வராஜ் மருத்துவமனைக்கு சென்று தனது உடலை பரிசோதனை செய்தார். ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், அதே போல் உடலில் ரத்த அழுத்த அளவும் அதிகமாக இருப்ப தாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதனால் செல்வராஜ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். வீட்டில் இருக்கும் போது நான் சீக்கிரமாக செத்து விடுவேன் என்று புலம்பிக்கொண்டிரு ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ந் தேதி வெள்ளிக்கிழமை காலை குன்னமலை சமத்துவபுரம் நிழற்கூடத்தில் அமர்ந்து செல்வராஜ் அங்கு தான் வாங்கி வந்த பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.

    பின்னர் வீட்டிற்கு சென்று தனது மனைவி மல்லிகாவிடம் தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சை க்காக ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டது. அங்கிருந்து ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற் கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செல்வராஜின் மனைவி மல்லிகா நல்லூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இச்சம்பவ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×