என் மலர்
நீங்கள் தேடியது "mother murder"
- சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர்.
- தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் அமடபாகுலா பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மா (வயது 64). இவரது மகன் ராமுலு, மருமகள் சிவமணி. ராமுலு அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். 3 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சங்கரம்மா கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்தார். ராமுலு தாயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இருப்பினும் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் தனது மனைவியுடன் சேர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த தாயை கழுத்தை நெருங்கி 2 பேரும் கொலை செய்தனர்.
பின்னர் தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தனர்.
சங்கரம்மா வீட்டில் இல்லாததை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ராமுலுவிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் வனபர்த்தி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்- இன்ஸ்பெக்டர் நாகசேகர் மற்றும் போலீசார் ராமுழு அவரது மனைவி சிவமணி ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தாய் நடக்க முடியாமல் அவதி அடைந்து வந்ததால் அவரை கொலை செய்து தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சங்கரம்மாவின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனபர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மகன், மருமகளை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார்.
- கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்
கடலூர்:
நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 பூம்புகார் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் தேவராஜ் (வயது37). திருமணம் ஆகாதவர். தேவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது. கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார். அப்போது வீட்டில் இருந்த தேவராஜின் தாய் பவுனம்பாள் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேள்வி ேகட்டார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தேவராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலிசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
- தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே கண்டாச்சிபுரம் போலீஸ் சரகம் வி.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 40). இவருக்கு திருமணமாகி விட்டது. 4 மகள்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே, இவர் தனது மனைவி குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவரது தாய் அசோதை (70). இவர் அந்த பகுதியில் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு சக்திவேல் தனது தாய் அசோதையிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டார். அதோடு ரேசன் கார்டையும் கேட்டு நச்சரித்தார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இன்று காலை திடீரென எழுந்த சக்திவேல் நேராக தனது தாய் அசோதையிடம் சென்று பணம் கேட்டார். இதனால் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது தாய் என்று கூட பாராமல் அசோதையை கொடூரமாக தாக்கினார். இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்து மயக்கம் அடைந்தார்.
அதிர்ச்சி அடைந்த சக்திவேல் தனது தாய் இறந்து விட்டார் என கருதி அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்குள்ள உறைகிணற்றில் வீசி சேலையால் அதனை மூடினார்.
நீண்ட நேரம் ஆகியும் தாய்-மகனை காணாததால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் தோட்டத்துக்கு சென்று பார்த்த போது சக்திவேல் அங்கு இருந்தார். அவர் அழுதபடி காணப்பட்டார். அவரிடம் கிராம மக்கள் விசாரித்த போது, தனது தாயை கொன்று விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து அரகண்டநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் வீசப்பட்ட அசோதையின் உடலை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.
பெற்ற தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மகனுக்கு சரிவர படிப்பு வராததால் யுவராணி மகனை அடிக்கடி கண்டித்துள்ளார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணியின் மகன் விடுதியில் இருந்து தன்னால் தங்கி படிக்க முடியாது என்று கூறி வீட்டுக்கே வந்து விட்டார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன் பாளையம் அடுத்த தேசிகிராமத்தை சேர்ந்தவர் அருள்செல்வன். காண்டிராக்டர். இவரது மனைவி யுவராணி (36). இவர் டானா புதூரில் உள்ள மின்வாரியத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார். மகள் புளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மகனுக்கு சரிவர படிப்பு வராததால் யுவராணி மகனை அடிக்கடி கண்டித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவராணியின் மகன் விடுதியில் இருந்து தன்னால் தங்கி படிக்க முடியாது என்று கூறி வீட்டுக்கே வந்து விட்டார்.
பின்னர் அவர் வீட்டிலிருந்து தினமும் சத்தியமங்கலத்தில் உள்ள பள்ளிக்கு சென்று வந்தார். தொடர்ந்து யுவராணி மகனை நன்றாக படிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இது அவரது மகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்விலும் யுவராணியின் மகன் சரியாக மார்க் எடுக்கவில்லை. இதை அடுத்து யுவராணி தனது மகனிடம் தந்தையிடம் கூறி மீண்டும் உன்னை பள்ளியில் உள்ள விடுதியில் சேர்க்கப்போகிறேன் என்று கூறி வந்தார். இதனால் யுவராணி மீது அவரது மகனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.
நேற்று யுவராணியின் கணவர் அருள்செல்வன் வேலை விஷயமாக கோயம்புத்தூர் சென்று விட்டார். அப்போது வீட்டில் யுவராணி தனது மகன், மகளுடன் இருந்தார். இரவு 8.30 மணி அளவில் யுவராணி தனது மகனிடம் நாளை காலை உனது தந்தையிடம் சொல்லிவிட்டு உன்னை பள்ளி விடுதிக்கு அழைத்து செல்ல போகிறேன் என்று கூறியுள்ளார்.
இதனால் அவரது மகன் யுவராணியிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கினர். யுவராணி தனது மகளுடன் வீட்டில் உள்ள ஹாலில் படுத்து தூங்கினார். அவரது மகன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் படுத்து தூங்கினார்.
தாய் மீது கோபத்தில் இருந்த மகன் விடிந்ததும் தன்னை மீண்டும் பள்ளி விடுதியில் சேர்த்து விடுவார்கள் என ஆத்திரம் அடைந்தார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் நள்ளிரவு 12 மணி அளவில் எழுந்து தாய் படுத்திருந்த ஹாலுக்கு சென்றார்.
அப்போது யுவராணி படுத்திருந்த இடத்தின் அருகே ஹலோ பிளாக் கல் மேல் ஒரு பூந்தொட்டி இருந்தது. ஆத்திரமடைந்த அவரது மகன் பூந்தொட்டியை எடுத்து முதலில் யுவராணி தலையில் அடித்துள்ளார். எனினும் ஆத்திரம் அடங்காததால் அருகில் இருந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து யுவராணி தலையில் அடித்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த யுவராணி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகே படுத்திருந்த அவரது மகள் எழுந்து பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அப்போது யுவராணியின் மகன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது யுவராணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தனர்.
பின்னர் யுவராணியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே யுவராணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் சத்தியமங்கலம் டி.எஸ்.பி.சந்திரசேகர், புளியம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் யுவராணி வீட்டுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய யுவராணியின் மகன் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி இருளர் நகரை சேர்ந்தவர் வைரமணி. இவருடைய மனைவி சாந்தி (46). இவர்கள் மகன் ஆனந்தராஜ் (26).
வைரமணி இறந்து விட்டார். எனவே சாந்தி மகன் ஆனந்தராஜுடன் வசித்து வந்தார். இவருக்கு தனது தாய் வேறு ஆண்களுடன் பழகுவதாக சந்தேகம் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வேலைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய தாய் சாந்தி வீட்டின் வெளியே ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆனந்த ராஜின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.
எனவே ஆத்திரம் அடைந்த அவர் தன் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் சாந்தி சுருண்டு விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக கருதி ஆனந்தராஜ் தாயை அருகில் உள்ள ஏரிக்கு கொண்டு சென்றார். அங்கு சாந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது அங்கு வந்த சாந்தியின் சகோதரர் மணிகண்டன் இதை பார்த்து விட்டார். தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்று பயந்த ஆனந்தராஜ் தனது தாய்மாமா மணிகண்டன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.
தீக்காயம் அடைந்த மணி கண்டன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இன்று ஆனந்தராஜை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (63).
கணவர் மறைவுக்கு பிறகு சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் வசித்து வந்தார். இவரது மகன் பிரவீன் வெளிநாட்டில் படித்து முடித்து விட்டு சென்னை வந்திருந்தார்.
கடந்த சில நாட்களாக தாயுக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது தாயை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன ரத்தினம் திருப்பூரில் உள்ள மகள் சுதாவுக்கு போன் செய்து பிரவீன் தன்னை மிரட்டியது குறித்து கூறியுள்ளார்.
இதற்கிடையே வீட்டில் ரத்தினம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
சாஸ்திரிநகர் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொத்து தகராறில் ரத்தினத்தை மகன் பிரவீன் தான் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
அவரது செல்போன் ’சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டுள்ளது. பிரவீன் சென்னையில் பதுங்கி இருக்கிறாரா? வேறு எங்கும் தப்பி ஓடி விட்டாரா? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் பிடியில் பிரவீன் சிக்கினால் தான் இந்த கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும்.
பிரவீனை பற்றிய தகவல்களை போலீசார் உறவினர் மற்றும் நண்பர்களிடம் சேகரித்து வருகிறார்கள். மகன் தப்பி ஓடியதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவான்மியூர்:
நீலாங்கரையை அடுத்த பாலவாக்கம் மணியம்மை தெருவை சேர்ந்தவர் ராணி அம்மாள் (64). இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில், ராணி அம்மாள் தனக்கு சொந்தமான வீடு, நிலம் ஆகியவற்றை ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் கொடுக்க முடிவு செய்தார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதையடுத்து ராணி அம்மாளின் 3-வது மகன் பர்ணபாஸ் தாயின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆட்டோ ஓட்டிவரும் இவர், தாயிடம் உள்ள வீடு, நிலம் ஆகியவற்றை எல்லா குழந்தைகளுக்கும் சமமாக கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.
ஆனால், ராணி அம்மாள் அதை ஏற்கவில்லை. தன்னை ஆதரித்து காப்பாற்றும் குழந்தைகளுக்குத்தான் கொடுப்பேன் என்று கூறி விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் தாய்க்கும்- மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நேற்று இரவு பர்ணபாஸ் ஆட்டோவில் வீடு திரும்பினார். அப்போது ராணி அம்மாள் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டு இருந்தார். அவரை பர்ணபாஸ் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவர் அணிந்திருந்த நகை, கம்மல் ஆகியவற்றை எடுத்துச் சென்று மனைவியிடம் கொடுத்தார். அவை ரத்தக்கறையுடன் இருந்ததால் பர்ணபாஸ் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
இதற்கிடையே, சொத்து கொடுக்காத ஆத்திரத்தில் தனது தாயை பர்ணபாஸ் கொலை செய்தது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் பாலவாக்கம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதையடுத்து, தப்பி ஓடமுயன்ற பர்ணபாசை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலைக்கு வேறு யாரும் தூண்டுதலாக இருந்தார்களா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வாளவராயன்குப்பம் கீழ தெருவை சேர்ந்தவர் முத்தையன். இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி உய்யம்மாள் (வயது 80). இவரது மகன் கலியமூர்த்தி (60).
கலியமூர்த்திக்கு பூசம் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்கள் உள்ளனர். இதில் மகன் இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் உய்யம்மாளுக்கும், அவரது மருமகள் பூசத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அப்போது கலியமூர்த்தி மனைவிக்கு ஆதரவாக இருந்து தனது தாயை தாக்குவாராம்.
இதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உய்யம்மாளுக்கும், பூசத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், பெற்ற தாய் என்றும் பாராமல் அடித்து உதைத்தார். அப்போது நிலை குலைந்து உய்யம்மாள் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த அடிபட்டு அங்கேயே இறந்து விட்டார். தாய் இறந்ததை கண்டு கலியமூர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனே வெளியே தெரியாமல் வீட்டிலேயே தாய் உடலை புதைத்து விட முடிவு செய்தார்.
பின்னர் வீட்டின் பின்புறம் கொல்லையில் குழி தோண்டி தாயின் உடலை புதைத்து விட்டார். பிறகு அவர் வழக்கம் போல் வெளியே உள்ளவர்களிடம் பேசி பழகி வந்தார்.
இந்த நிலையில் உய்யம்மாளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவி தொகை வரும். இதேபோல் இந்த மாதத்துக்கான உதவி தொகை வந்தது. உய்யம்மாள் இறந்து விட்டதால் உதவிதொகை வாங்க முடியவில்லை. இதனால் உய்யம்மாளை எங்கே? என்று அக்கம்பக்கத்தினர் கலியமூர்த்தியிடம் கேட்க தொடங்கினர். அவர் தாய்க்கு உடம்புக்கு சரியில்லை. இதனால் வீட்டிலேயே இருக்கிறார் என்று கூறி சமாளித்து பார்த்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு கேள்விகள் கேட்டதால் வேறுவழியின்றி ஊர் நாட்டாண்மை சுப்பையா என்பவரை சந்தித்து தனது தாய் உய்யம்மாளை கொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவத்தை கூறினார்.
இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுகுறித்து பெரம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கலியமூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தினர். தாயை கொன்றதை அவர் ஒப்பு கொண்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. தேன்மொழி முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பெற்ற தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் குத்தாலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews