என் மலர்

  செய்திகள்

  நடத்தையில் சந்தேகம் - தாயை எரித்து கொன்ற மகன் கைது
  X

  நடத்தையில் சந்தேகம் - தாயை எரித்து கொன்ற மகன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கல்பட்டு அருகே தாயை பெட்ரோல் உற்றி எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  செங்கல்பட்டு:

  வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி இருளர் நகரை சேர்ந்தவர் வைரமணி. இவருடைய மனைவி சாந்தி (46). இவர்கள் மகன் ஆனந்தராஜ் (26).

  வைரமணி இறந்து விட்டார். எனவே சாந்தி மகன் ஆனந்தராஜுடன் வசித்து வந்தார். இவருக்கு தனது தாய் வேறு ஆண்களுடன் பழகுவதாக சந்தேகம் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆனந்தராஜ் வேலைக்கு சென்றுவிட்டு மதுபோதையில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய தாய் சாந்தி வீட்டின் வெளியே ஒரு ஆணுடன் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் ஆனந்த ராஜின் சந்தேகம் மேலும் அதிகரித்தது.

  எனவே ஆத்திரம் அடைந்த அவர் தன் தாயை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் சாந்தி சுருண்டு விழுந்தார். அவர் இறந்துவிட்டதாக கருதி ஆனந்தராஜ் தாயை அருகில் உள்ள ஏரிக்கு கொண்டு சென்றார். அங்கு சாந்தி உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தார். அப்போது அங்கு வந்த சாந்தியின் சகோதரர் மணிகண்டன் இதை பார்த்து விட்டார். தன்னை காட்டிக் கொடுத்துவிடுவார் என்று பயந்த ஆனந்தராஜ் தனது தாய்மாமா மணிகண்டன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டார்.

  தீக்காயம் அடைந்த மணி கண்டன் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

  இந்தநிலையில் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இன்று ஆனந்தராஜை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
  Next Story
  ×