என் மலர்

  செய்திகள்

  தாயை கொன்றுவிட்டு தலைமறைவு - அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் மகனை பிடிக்க வேட்டை
  X

  தாயை கொன்றுவிட்டு தலைமறைவு - அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யின் மகனை பிடிக்க வேட்டை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாயை கொன்றுவிட்டு தப்பிய அதிமுக முன்னாள் எம்பியின் மகனை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (63).

  கணவர் மறைவுக்கு பிறகு சென்னை சாஸ்திரி நகர் 6-வது அவென்யூவில் வசித்து வந்தார். இவரது மகன் பிரவீன் வெளிநாட்டில் படித்து முடித்து விட்டு சென்னை வந்திருந்தார்.

  கடந்த சில நாட்களாக தாயுக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது தாயை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

  இதனால் பயந்து போன ரத்தினம் திருப்பூரில் உள்ள மகள் சுதாவுக்கு போன் செய்து பிரவீன் தன்னை மிரட்டியது குறித்து கூறியுள்ளார்.

  இதற்கிடையே வீட்டில் ரத்தினம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

  சாஸ்திரிநகர் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  சொத்து தகராறில் ரத்தினத்தை மகன் பிரவீன் தான் கொலை செய்து இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

  அவரது செல்போன் ’சுவிட்ச்ஆப்’ செய்யப்பட்டுள்ளது. பிரவீன் சென்னையில் பதுங்கி இருக்கிறாரா? வேறு எங்கும் தப்பி ஓடி விட்டாரா? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

  போலீஸ் பிடியில் பிரவீன் சிக்கினால் தான் இந்த கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும்.

  பிரவீனை பற்றிய தகவல்களை போலீசார் உறவினர் மற்றும் நண்பர்களிடம் சேகரித்து வருகிறார்கள். மகன் தப்பி ஓடியதால் போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×