நெய்வேலியில் மது போதையில் தாயை அடித்துக் கொன்ற மகன்

கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார்.கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்
நெய்வேலியில் மது போதையில் தாயை அடித்துக் கொன்ற மகன்
Published on

கடலூர்:

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்-21 பூம்புகார் சாலையில் வசித்து வருபவர் தங்கவேல் மகன் தேவராஜ் (வயது37). திருமணம் ஆகாதவர். தேவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததுள்ளது‌. கடந்த 4ம்- தேதி தேவராஜ் தனது வீட்டிற்கு மது போதையுடன் வந்தார். அப்போது வீட்டில் இருந்த தேவராஜின் தாய் பவுனம்பாள் ஏன் குடித்துவிட்டு வருகிறாய் என்று கேள்வி ேகட்டார்.அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மது போதையில் இருந்த தேவராஜ் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து அவர் தாயை சரமாரியாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இந்நிலையில்மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவுனாம்பாள் நேற்று உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலிசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். குடிபோதையில் தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com