சிறுமிகளின் ஆபாச படம் பதிவிறக்கம் செய்த மாணவர் கைது- அமெரிக்க புலனாய்வு பிரிவு காட்டிக்கொடுத்தது

பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.
சிறுமிகளின் ஆபாச படம் பதிவிறக்கம் செய்த மாணவர் கைது- அமெரிக்க புலனாய்வு பிரிவு காட்டிக்கொடுத்தது
Published on

தெலுங்கானா மாநிலம், மெஹபூபாத்தை சேர்ந்த மாணவர் ராமானந்தபூரில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து வருகிறார். சிறுமிகளின் ஆபாச படங்களை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து வந்தார்.

மேலும் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.

மாணவனின் இந்த செயல்களை அமெரிக்காவில் உள்ள சிறுவர் ஆபாச பதிவிறக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அமெரிக்க புலனாய்வு அமைப்பு கண்காணித்தது.

மாணவனின் செல்போன் எண் மற்றும் ஐ.பி. முகவரி மூலம் அவர் ஆபாச படம் பதிவிறக்கம் செய்வதை கண்டுபிடித்தனர்.

அந்நாட்டு நோடல் ஏஜென்சி மூலம் இந்தியாவில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு மாணவர் குறித்த தகவல்களை தெரிவித்தனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் தெலுங்கானா மாநில போலீசாருக்கு அமெரிக்க புலனாய்வு அமைப்பு அனுப்பிய மாணவரின் தகவல்களை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து தெலுங்கானா போலீசார் மாணவனின் செல்போன் டவர் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com