என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐதராபாத் விடுதியில் 11 மாணவிகளை மிரட்டி பலாத்காரம்- காவலாளி ஜெயிலில் அடைப்பு
    X

    ஐதராபாத் விடுதியில் 11 மாணவிகளை மிரட்டி பலாத்காரம்- காவலாளி ஜெயிலில் அடைப்பு

    • ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
    • விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதாபத்தில் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கி இருந்து மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    ரஹமான் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இவரது அட்டூழியம் தினமும் நீடித்தது.

    இதனால் 3 மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ரஹமான் மாணவிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் 5 போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சஞ்சல்குடா ஜெயிலில் அடைத்தனர்.

    ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் விடுதிக்கு சென்று அங்கு தங்கி உள்ள மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது காவலாளி மிரட்டி பலாத்காரம் செய்ததாக சில மாணவிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதை கேட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

    காவலாளி ரஹமான் மேலும் சில மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் ஏற்கனவே விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி நிர்வாகிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

    அதிக அளவில் பாலியல் புகார்கள் வந்ததால் போலீசார் ரஹ்மானை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×