search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் ஐ.டி ஊழியரை மிரட்டி ரூ. 90 ஆயிரம் பணம் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது
    X

    கோப்புபடம்.

    திருப்பூரில் ஐ.டி ஊழியரை மிரட்டி ரூ. 90 ஆயிரம் பணம் பறிப்பு - 3 வாலிபர்கள் கைது

    • வாலிபர் ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.
    • காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). இவர் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கார்த்திக் மோட்டார் சைக்கிளில் கோவைக்கு சென்றுள்ளார்.வஞ்சிபாளையம் பகுதியில் வந்தபோது வாலிபர்ஒருவர், தன் மோட்டார் சைக்கிள் பஞ்சர் ஆனதாக கூறி லிப்ட் கேட்டு ஏறியுள்ளார்.சிறிது தூரத்தில் காட்டுப்பகுதிக்கு வந்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறி வாலிபர் இறங்கியுள்ளார்.அப்போது ஏற்கனவே அங்கு இருந்த 2 வாலிபர்களும் சேர்ந்து, திடீரென கார்த்திக்கை பணம்கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன கார்த்திக் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.

    இதையடுத்து மொபைலில்இருந்து கூகுள் பே மூலம் ரூ.90 ஆயிரத்தை 2 பேரின்வங்கி கணக்கிற்கு பிரித்துகார்த்திக் அனுப்பி உள்ளார். பின்னர் 3 பேரும்அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீசார்வழக்குபதிந்து விசாரணைநடத்தினர்.மேலும் வங்கி கணக்குஎண் மற்றும் செல்போன்எண்களை கைப்பற்றி விசாரித்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது வஞ்சிபாளையம்பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் (26), தனபாலன்(26), சுபாஷ் (26) ஆகியோர் என தெரிய வந்தது.இதையடுத்து 3 பேரையும்திருமுருகன்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்மற்றும் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    Next Story
    ×