search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "son in law"

    • கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார்.
    • விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள நாகியம்பட்டி ஆண்டிக்குட்டைய சேர்ந்தவர் மருதை (வயது 60) இவர் தனது மகள் தனலட்சுமியை கடநத 15 ஆண்டுகளுக்கு முன்பு கெங்கவல்லி அருகே உள்ள உலி புரம் புங்கமரத்துக்காடு பகுதியை சேர்ந்த சரவணன் (40) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு 12 மற்றும் 5 வயதில் 2 மகள்களும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    கூலி தொழிலாளியான சரவணன் தனலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சரவணன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி நாகியம்பட்டியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

    அன்று இரவு 10 மணியளவில் நாகியம்பட்டி சென்ற சரவணன் தனது மாமனார் மருதையிடம் மனைவியை தன்னுடன் அனுப்புமாறு கூறினார். நீ சந்தேகப்பட்டு அடிப்பதால் அவளை உன்னுடன் அனுப்ப முடியாது, நீ இங்கிருந்து சென்று விடு என்று கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து அவர் தகராறு செய்ததால் அருகில் கிடந்த கம்பை எடுத்து பின்னால் விரட்டியுள்ளார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.

    இந்நிலையில் நேற்று அங்குள்ள அய்யப்பன் கோவில் அருகில் இருக்கும் ஆலமரத்தின் அடியில் மருதை பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் தம்மம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்திய போது சரவணன், மருதையை கல்லால் தாக்கி கொலை செய்து உடலை அங்கு வீசி சென்றது தெரிய வந்தது.

    போலீசார் சரவணனை தேடிய போது தலைமறைவானதும், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பின்னூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.

    அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனது மனைவி என்னுடன் கோபித்து கொண்டு அவரது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவளை நான் அழைக்க சென்றபோது எனது மாமனார் மருதை என்னை அடித்து விரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் காட்டுப்பகுதியில் வைத்து அவரை கல்லால் தாக்கினேன், இதில் காயம் அடைந்த அவர் இறந்துவிட்டார், அங்கிருந்து தப்பி கேரளா சென்றேன், ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார்.

    பல்லடம் :

    பல்லடத்தைச் சேர்ந்தவர் குமார்( 60) பனியன் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா(55) இவர்களது மகளும், பல்லடம் காரணம்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் மகன் அருணாச்சலம் (48) என்பவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் சமீபகாலமாக அருணாச்சலத்துக்கு அதிகமான குடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தன்று மது போதையில் இருந்த அருணாச்சலம் வசந்தாவின் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டதுடன், வசந்தாவின் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கி உள்ளார்.

    இதில் படுகாயம் அடைந்த வசந்தா, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருணாச்ச லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார்.
    • உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    விசாகப்பட்டினம்:

    ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தலை பொங்கல் கொண்டாடும் மருமகனுக்கு மிக பிரமாண்டமாக விருந்து வைப்பது சமீப ஆண்டுகளாக புகழ்பெற்று வருகிறது.

    போட்டி போட்டு வகை வகையாக மருமகன்களுக்கு விருந்து வைத்து பொங்கல் திருநாளில் பெயர் பெறுவதை ஆந்திராவில் பல்வேறு பகுதி மக்களும் பெருமையாக கருதுகிறார்கள். குறிப்பாக கோதாவரி மாவட்ட மக்கள் இத்தகைய விருந்து வைப்பதில் புகழ் பெற்று திகழ்கிறார்கள்.

    கடந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தொழில் அதிபர் ஒருவர் தனது மருமகனுக்கு 365 வகைகளில் பொங்கல் விருந்து வைத்திருந்தார். இந்த ஆண்டு எலுரு நகரை சேர்ந்த தொழில் அதிபர் பீமாராவ் அந்த சாதனையை முறியடிக்க முடிவு செய்தார்.

    அவர் மகள் குஷ்மாவை விசாகப்பட்டினம் அருகே உள்ள அனகாபள்ளியை சேர்ந்த புத்தா முரளிதர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். இந்த ஆண்டு முரளிதருக்கு தலை பொங்கல் ஆகும்.

    முரளிதரையும், மகள் குஷ்மாவையும் தொழில் அதிபர் பீஷ்மாராவ் தனது வீட்டுக்கு தலை பொங்கல் விருந்துக்கு அழைத்திருந்தார். நேற்று முன்தினம் அவர்களுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. விருந்தில் 379 வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

    அந்த உணவு வகைகளை பார்த்து மருமகன் முரளிதர் கடும் அதிர்ச்சி அடைந்தார். 379 வகையான உணவுகளில் 10 சதவீதத்தை கூட அவர் சாப்பிடவில்லை. என்றாலும், இந்த பிரமாண்ட விருந்து ஆந்திராவில் பரபரப்பாக பேசப்பட்டது.

    • மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை எழுமலை இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 39). இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் மகளுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் முத்து ராஜா புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார். இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மாமனார் பிரபாகரன் (48), மாமியார் பிச்சைமணி (45) மற்றும் மகன் பிரபு (28) ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று முத்துராஜா வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இரும்பு கம்பி, மண்வெட்டியால் முத்துராஜாவை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

    எனவே முத்துராஜா இதுதொடர்பாக, எழு மலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, பிரபாகரன் மற்றும் பிச்சைமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதே வழக்கில் பிச்சை மணி கொடுத்த புகாரின் பேரில் முத்துராஜாவை யும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மாமனாரின் சொத்து பத்திரங்களுடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
    • நெல்லை வந்த தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தை சேர்ந்தவர் சிம்சோன் (வயது75). இவருக்கும், இவரது மகளின் கணவரான ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்களத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கு இடையே சொத்து தகராறு தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

    முதியவர் கொலை

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் முருகன், சிம்சோனை கொலை செய்தார். மேலும் அவரது உடலை சாக்குமூட்டையில் வைத்து கிணற்றில் வீசி முயன்ற போது போலீசார் பார்த்துவிட்டனர். உடனே அவர் தப்பி சென்றுவிட்டார்.

    இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி. லயோலா மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் மாமனாரின் சொத்து பத்திரங்களுடன் நெல்லையில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகன் சென்றுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து நெல்லை சென்ற தனிப்படையினர் முருகனை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒட்டன்சத்திரத்தில் மாமனாரை குத்திக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசபிள்ளை பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 49). இவர் குடும்ப தகராறு காரணமாக தனது மனைவி கலைச் செல்வியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கலைச் செல்வி தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று கலைச் செல்வி நடந்து சென்று கொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த வேலுச்சாமி அவர் மீது மோதினார். இதனால் கலைச் செல்வி கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் கலைச் செல்வியின் தந்தை கருப்பணகவுண்டர் சம்பவ இடத்துக்கு வந்து மருமகன் வேலுச்சாமியை கத்தியால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வேலுச்சாமி தனது மாமனார் வைத்திருந்த கத்தியை பறித்து அவரையே குத்தினார்.

    படுகாயமடைந்த 2 பேரும் ஒட்டன்சத்திரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் கருப்பணகவுண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.

    வங்கியில் கடன் வாங்கிய தகராறில் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி சுமதி. இவர் பாப்ஸ்கோவில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகள் தேவி. தேவிக்கும் லாஸ்பேட்டை அசோக்நகர் பாரதி தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (31) என்பவருக்கு திருமணம் நடந்தது.

    பன்னீர் செல்வம் பிளாஸ்டிக் கதவு செய்யும் கடை வைத்துள்ளார். கடைக்கு ஒருவங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இதற்கு அவரது மாமியார் சுமதி சாட்சியாக கையெழுத்து போட்டுள்ளார். ஒரு சில மாதங்களில் கடையையும் மூடிவிட்டு, வாங்கிய கடனையும் கட்டாமல் பன்னீர் செல்வம் நிறுத்தி விட்டார்.

    மேலும் பணம் கட்டாததாலும், கடையை மூடிவிட்டதாலும் வங்கியில் இருந்து மாமியார் சுமதியிடம் சென்று பணம் கட்டுமாறு கூறினர். அதற்கு மாமியார், மருமகன் பன்னீர் செல்வத்தின் செல்போன் எண்களை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர்செல்வம் மாமியார் சுமதி வேலைபார்க்கும் பாப்ஸ்கோ கடைக்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மருமகன் பன்னீர் செல்வம் மாமியார் சுமதியை சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில் காயம் அடைந்த சுமதி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இதுகுறித்து சுமதி லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்குளி அருகே மாமனாரை குத்தி கொன்ற மருமகன் கைது கடனை திருப்பி தராததால் கொன்றதாக வாக்கு மூலம்

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள மொலக் கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (54) சத்துணவு ஊழியர். இவரது மகள் வனிதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்தருக்கும் திருமணம் நடைபெற்றது. கணவன் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து வனிதா தனது தந்தை சுந்தரேசனுக்கு தகவல் தெரிவித்தார்.அவர் தகராறை தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பாலசந்தர் கத்தியால் சுந்தரேசனை குத்தினார். இதில் அவர் அதே இடத்தில் இறந்தார்.

    இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசந்தரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    எனது மாமனார் சுந்தரேசன் என்னிடம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். அதில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை மட்டும் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ. 30 ஆயிரத்தை வாங்கி தரும்படி மனைவியிடம் தெரிவித்தேன். அவர் வாங்கி தர மறுத்தார். இதனால் மனைவியிடம் தகராறு செய்தேன். அவர் தனது தந்தைக்கு போன் செய்தார். இதனை தொடர்ந்து சுந்தரேசன் எனது வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் எனக்கும் தகராறு உருவானது. அவரை கத்தியால் குத்தினேன். இதில் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    கூடங்குளம் அருகே மகளை அடித்ததை தட்டி கேட்ட மாமனாரை மருமகன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள காடுதுலா கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது55), விவசாயி. இவரது மகள் பரமசெல்வி என்பவரை அதே பகுதியை சேர்ந்த டிரக்கர் டிரைவர் அந்தோணி ராஜ் (36) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

    கடந்த சில மாதங்களாக அந்தோணிராஜ், தினசரி மது குடித்து விட்டு வந்து பரமசெல்வியை அடித்து உதைத்தார். இதை பரம செல்வி தனது தந்தையிடம் கூறி அழுதார். இதைத் தொடர்ந்து நேற்று இரவு பெருமாள், மகள் வீட்டுக்கு சென்று அங்கிருந்த மருமகன் அந்தோணி ராஜை சத்தம் போட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ், மாமனார் வீட்டை விட்டு வெளியே வரவும், உருட்டு கட்டையுடன் பின்னால் சென்று சரமாரியாக அடித்தார். இதில் மண்டை உடைந்து உயிருக்கு போராடிய பெருமாளை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் பெருமாள் மரணம் அடைந்தார்.

    இதுகுறித்து பெருமாள் மனைவி புஷ்பம் கூடங்குளம் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. கனகராஜ், இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தப்பி ஓடிய அந்தோணி ராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்ததால் மாமனார் வீட்டின் மீது மருமகன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #petrolbomb
    நெல்லை:

    நெல்லை வண்ணார் பேட்டை பேராச்சியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மகள் செல்வி (வயது30). இவருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த சரவணன்(32) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பின் செல்வி தூத்துக்குடியில் கணவர் வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் செல்வி வண்ணார் பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். மேலும் சரவணனிடம் இருந்து விவாகரத்து கேட்டு செல்வி நெல்லை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    இதனிடையே சரவணன் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி வீட்டருகே நின்று ரகளை செய்தாராம். நேற்றிரவு குடிபோதையில் சரவணன், செல்வியின் வீட்டுக்கு வந்தார். திடீரென செல்வின் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசினார். இதனால் அந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டின் முன்பு நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு சைக்கிள் சேதமாகின.



    உடனே சரவணன் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சத்தம் கேட்டு வெளியில் வந்த செல்வி, அவரது தந்தை முத்துராமலிங்கம் ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி பாளை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை தேடி வந்தனர்.

    இன்று காலை பாளை பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த சரவணனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விவகாரத்து வழக்கு தொடர்பாக செல்வியை மிரட்டும் நோக்கில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான சரவணன் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #petrolbomb

    ஆற்காடு அருகே மாமனாரை கொடூரமாக அடித்துக்கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் ஆற்காடு கலவை அடுத்த மேல்புதுப்பாக்கம் புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 55). இவர், போளூரை சேர்ந்த சுப்பிரமணி மகன் சங்கர் (35) என்பவருக்கு தனது மகள் மலரை திருமணம் செய்து கொடுத்தார்.

    திருமணத்திற்கு பிறகு, சங்கர் மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில், சங்கர் சில நாட்களாக சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். வாரம் ஒருமுறை வீட்டிற்கு வந்து சென்றார்.

    இதற்கிடையே மாமனார், மருமகனிடையே சொத்து தகராறு ஏற்பட்டது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு மருமகன் மீதான ஆத்திரத்தில் மனைவி மற்றும் மகளை ஏழுமலை வீதியில் விரட்டி விரட்டி தாக்கினார்.

    ஊருக்கு வந்த சங்கர், நேற்று இரவு மாமனாரிடம் மோதலில் ஈடுபட்டார். உருட்டுக்கட்டையால் மாமனார் என்றும் பார்க்காமல் கொடூரமாக தாக்கினார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டத்தில் ஏழுமலை சுருண்டு விழுந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏழுமலை மீட்கப்பட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நள்ளிரவு சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக வாழபந்தல் போலீசார், கொலை வழக்குப்பதிந்தனர். மாமனார் இறந்ததையறிந்த சங்கர் தலைமறைவானார். போலீசார் அவரை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர்.

    இன்று காலை திமிரியில் இருந்து வெளியூருக்கு தப்பி செல்வதற்காக கலவை செல்லும் சாலையில் உள்ள கனியனூர் பஸ் நிறுத்தம் அருகே பதுங்கியிருந்த சங்கரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    முதற்கட்ட விசாரணையில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்கனவே, மாமனார், மருமகனிடையே முன்விரோதம் இருந்ததும் தெரியவந்துள்ளது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சங்கரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ஸ்டெர்லைட் ஆலையில் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், வைகோவின் மருமகன் ஆகியோர் காண்டிராக்ட் எடுத்துள்ளார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் எல்லா பிரச்சினைக்கும் தமிழக அரசு தான் காரணம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மு.க.ஸ்டாலின் சற்று கடந்த கால வரலாற்றை திரும்பி பார்க்கவேண்டும்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை எனும் நிலைப்பாட்டை எடுத்தார். அவரின் அந்த நிலைப்பாட்டையே நாங்கள் பின்தொடர்ந்து வருகிறோம். எனவே எப்படி தமிழக அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டுகிறார்? என்பது தெரியவில்லை.



    அந்த ஆலையை வைத்து அரசியல் தான் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது அந்த ஆலைக்கு எதிரான பேரணிக்கெல்லாம் தலைமை தாங்கி வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், அவரது பெயரில் அங்கு 600 வண்டிகள் ஓடுவதாகவும் ஒரு தகவல். அதேபோல மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கியே தீருவேன் என்று அடம்பிடித்து வரும் வைகோவின் மருமகனும் ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாக ஒரு தகவல்.

    ஸ்டெர்லைட் ஆலையை பயன்படுத்தி வருபவர்கள் இப்படியாக இருக்க, அந்த ஆலையை மக்கள் நலனுக்காக தேவையில்லை என்று முடிவில் உள்ள தமிழக அரசின் மீது குற்றம் சாட்டப்படுவதை மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள். எது உண்மை, யார் நல்லவர்? என்று மக்களுக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×