பல்லடத்தில் மாமியாரின் மண்டையை உடைத்த மருமகன் கைது

கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

பல்லடம் :

பல்லடத்தைச் சேர்ந்தவர் குமார்( 60) பனியன் தொழிலாளி. இவரது மனைவி வசந்தா(55) இவர்களது மகளும், பல்லடம் காரணம்பேட்டையை சேர்ந்த பால்ராஜ் மகன் அருணாச்சலம் (48) என்பவரும் திருமணம் செய்து கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக அருணாச்சலத்துக்கு அதிகமான குடி பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்- மனைவிக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சம்பவத்தன்று மது போதையில் இருந்த அருணாச்சலம் வசந்தாவின் வீட்டுக்கு சென்று, தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு வற்புறுத்தி, தகராறில் ஈடுபட்டதுடன், வசந்தாவின் தலையில் மதுபான பாட்டிலால் தாக்கி உள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த வசந்தா, பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க ப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருணாச்ச லத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com