என் மலர்
நீங்கள் தேடியது "affairs"
- 18 வயது வாலிபர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
- மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கே.வி.பி.புரம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர்.
இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அதே பகுதியில் வசித்து வந்தனர் இவர்களுடன் கணவனை இழந்த சிறுமியின் 40 வயது தாயாரும் வசித்து வந்தார்.
இந்த நிலையில் மாமியாருக்கும் மருமகனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது சிறுமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தனர்.
இதனை அறிந்த சிறுமி தனது கணவர் மற்றும் தாயாரை கண்டித்தார் ஆனாலும் அவர்கள் கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் மாமியார் தனது மருமகனை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே வாலிபர் தனது மாமியாருக்கு தாலி கட்ட முயன்றார். இதனை கண்ட அவருடைய மனைவி தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார்.
ஆத்திரமடைந்த அவரது தாயும் கணவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து சிறுமியை மீட்டனர் . மேலும் மாமியார் மற்றும் மருமகனை சரமாரியாக தாக்கினார் அவர்கள் இருவரையும் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மோட்டார் சைக்கிளில் இருவருடன் சந்தைக்கு சென்று திரும்பிய போது உறவினர்கள் பார்த்து ஆத்திரம்.
- மாமியாருக்கு சொந்தமான நபருடன் சென்ற போதிலும், உறவினர்கள் கள்ளக்காதல் என சந்தேகப்பட்டு தாக்குதல்.
ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் இரண்டு ஆண்களுடன் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மார்க்கெட்டுக்கு சென்று சொந்த கிராமத்திற்கு திரும்பியபோது, பெண்ணின் உறவினர்கள் அவர்களை பார்த்துள்ளனர். அப்போது அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கும் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி தகராறு செய்தனர்.
அப்போது கிராம மக்கள் ஒன்று கூடினர். அவர்கள் மூன்று பேரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அத்துடன் அவர்களை கடுமையாக தாக்கினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்களில் ஏற்றிச் சென்ற இரண்டு பேர்களில் ஒருவர், அந்த பெண்ணின் மாமியாருக்கு நெருங்கிய நபரும், சகோதரன் போன்றவர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவருடைய தந்தை வழி மாமா உள்பட சிலர் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டினர்.
பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.
எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறுவிசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம் சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என தெரிகிறது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani






