என் மலர்
இந்தியா

கள்ளக்காதல் சந்தேகம்: பெண் மற்றும் இரண்டு ஆண்களை மின்கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த கிராம மக்கள்..!
- மோட்டார் சைக்கிளில் இருவருடன் சந்தைக்கு சென்று திரும்பிய போது உறவினர்கள் பார்த்து ஆத்திரம்.
- மாமியாருக்கு சொந்தமான நபருடன் சென்ற போதிலும், உறவினர்கள் கள்ளக்காதல் என சந்தேகப்பட்டு தாக்குதல்.
ஒடிசா மாநிலம் காஷிபுர் கிராமத்தில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு, திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் இரண்டு ஆண்களுடன் மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஜாஷிபூர் வாரச் சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
மார்க்கெட்டுக்கு சென்று சொந்த கிராமத்திற்கு திரும்பியபோது, பெண்ணின் உறவினர்கள் அவர்களை பார்த்துள்ளனர். அப்போது அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கும் அந்த பெண்ணிற்கும் கள்ளக்காதல் இருப்பதாக கூறி தகராறு செய்தனர்.
அப்போது கிராம மக்கள் ஒன்று கூடினர். அவர்கள் மூன்று பேரையும் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர். அத்துடன் அவர்களை கடுமையாக தாக்கினர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்களில் ஏற்றிச் சென்ற இரண்டு பேர்களில் ஒருவர், அந்த பெண்ணின் மாமியாருக்கு நெருங்கிய நபரும், சகோதரன் போன்றவர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவருடைய தந்தை வழி மாமா உள்பட சிலர் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டினர்.






