மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமியார் உள்பட 3 பேர் கைது

மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய மாமியார் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார்.
மருமகனை இரும்பு கம்பியால் தாக்கிய  மாமியார் உள்பட 3 பேர் கைது
Published on

மதுரை

மதுரை எழுமலை இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 39). இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பிரபாகரன் மகளுடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் முத்து ராஜா புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் தனது மனைவியிடம் நகைகளை அடகு வைப்பதற்காக கேட்டுள்ளார். இது தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாமனார் பிரபாகரன் (48), மாமியார் பிச்சைமணி (45) மற்றும் மகன் பிரபு (28) ஆகிய 3 பேரும் சம்பவத்தன்று முத்துராஜா வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்க ளுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும் இரும்பு கம்பி, மண்வெட்டியால் முத்துராஜாவை சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

எனவே முத்துராஜா இதுதொடர்பாக, எழு மலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, பிரபாகரன் மற்றும் பிச்சைமணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதே வழக்கில் பிச்சை மணி கொடுத்த புகாரின் பேரில் முத்துராஜாவை யும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com