search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கை"

    • சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார்.
    • ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது.

    உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், ராவணன், எந்திரன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

    சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் புகழ்பெற்ற 77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க மகள் ஆராத்யாவுடன் பிரான்ஸ் சென்றார். அப்போது அவர் கையில் அடிபட்டு கட்டுப்போட்டு இருந்தார்.

    அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலானதை பார்த்த ரசிகர்கள் பதறினார்கள். ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என்று தவிப்போடு கேள்விகள் எழுப்பினர். விரைவில் குணமாக வேண்டியும் பதிவுகள் வெளியிட்டனர்.

    ஐஸ்வர்யா ராய்க்கு விபத்தில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டது. கட்டுப்போட்ட கையுடனேயே வித்தியாசமான உடையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றார்.

    தற்போது ஐஸ்வர்யா ராய் பிரான்சில் இருந்து மும்பை திரும்பி உள்ளார். அடுத்த சில தினங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப்போட்டுள்ள கையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள ஐஸ்வர்யாராய் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வெங்கடரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.
    • பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், கமலபாடுவை சேர்ந்தவர் வெங்கட ரத்தினம்மா (வயது 78).

    இவரது மகன் வெங்கடேஸ்வரலு, மகள் திருப்பத்தமா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    கணவர் இறந்து விட்டதால் வெங்கட ரத்தினம்மா மகன் வெங்கடேஸ்வரலு வீட்டில் வசித்து வருகிறார்.

    வயது முதிர்வு மற்றும் சிறுநீரக கோளாறால் வெங்கட ரத்தினம்மா அவதி அடைந்து வந்தார். வெங்கடேஸ்வரலுவின் மனைவி மாமியாருக்கு பணிவிடை செய்ய விருப்பம் இல்லாததால் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஸ்வரலு தனது மனைவியுடன் சேர்ந்து தாயை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். நல்கொண்டா அடுத்த மிரியாகுலா அருகே உள்ள வைகுந்தம் என்ற இடத்தில் தாயை இறக்கிவிட்டார்.

    அப்போது வெங்கடரத்தினமா மகனிடம் இங்கே ஏன் என்னை விட்டு செல்கிறாய் வீட்டிற்கு அழைத்துச் செல் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரலு மனைவியுடன் சேர்ந்து தாயின் 2 கைகளையும் பின்புறமாக வளைத்து கையை உடைத்தனர். பின்னர் அங்குள்ள புதரில் தள்ளிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

    அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வெங்கட ரத்தினம்மா இரவு முழுவதும் வலியால் அலறி துடித்தார். நேற்று காலை கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அந்த வழியாக வந்தனர்.

    மூதாட்டி அழும் சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கு சென்று பார்த்த போது வெங்கட ரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நல்கொண்டா கலெக்டர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கட ரத்தினம்மாவை மீட்டனர்.

    அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதையடுத்து வெங்கடேஸ்வரலு, அவரது மனைவி ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

    இதுபோல் மீண்டும் தாயை கொடுமைப்படுத்தினால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

    பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது.
    • கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபற்றி டீன் ஏற்கனவே பெற்றோரிடம் விளக்கமாக கூறி இருக்கிறார். தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    டாக்டர்களோ, செவிலியர்களோ குழந்தைகளை காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட வாய்ப்பு குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என்று விசாரிப்பதற்காக 3 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு விசாரித்து அறிக்கை தரும். கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசையா?
    • தக்கலையில் இன்று காலை பரபரப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

    இன்று காலை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷைஜாராணி (வயது 42), அவரது மகள் ஆதிரா (8) மற்றும் பத்மலதா(55), பிரியா (45), சாந்தா (65) ஆகியோர் பஸ்சில் புறப்பட்டு வந்தனர்.

    அவர்கள் தக்கலை பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து மண்டைக்காடு செல்லும் பஸ்சில் ஏறினர். பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஷைஜாராணி கையில் யாரோ பிளேடால் கீறி உள்ளனர். இதனால் அவர் வலியால் கத்தினார்.

    மேலும் அவரது மகள் ஆதிராவுக்கும் அதேபோல் காயம் ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்படவே, பஸ்சை தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பிக்பாக்கெட் திருடர்கள் யாராவது, பேக்கை கிழிக்கும் போது தாய்-மகள் கைகளை தெரியாமல் கிழித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இது தொடர்பாக பஸ்சில் வந்த ஓருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஷைஜாராணி, அவரது மகள் ஆதிரா சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

    • கேரள போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள மாந்தறை பகுதியை சேர்ந்தவர் சஜித் (வயது 39), மீன் பிடி தொழிலாளி.

    இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சுதீர். 2 பேரும் ஒன்றாக தான் கடலுக்கு மீன் பிடிக்க செல்வார்கள். இவர்க ளுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.

    நேற்று 2 பேரும் கட லுக்கு சென்று திரும்பி யதும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

    அப்போது ஆத்திர மடைந்த சுதீர், தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியை எடுத்து நண்பர் என்றும் கூட பார்க்காமல் சஜீத்தை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது 2 கைகளின் மணிக்கட்டு பகுதிகளும் துண்டானது. சஜீத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அவர்களை பார்த்ததும் சுதீர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சஜீத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மாந்தறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருவ னந்தபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அயரூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சுதீர் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மது தகராறில் நண்பரின் 2 கைகளையும் வாலிபர் வெட்டி துண்டாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அரிவாளால் வெட்டி விட்டு தப்பியதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.
    • அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38) கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (24). இவர்களிடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்த–ன்று அய்யப்பனை, ஞான–பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான செல்வமணி (26), முருகதாஸ் (23) பாலகிருஷ்ணன் (25) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.

    அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானபிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகதாஸ், செல்வமணியை தேடி வருகின்றனர்.ள

    அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கத்தால் மிகவும் அரிதான கேன்சரால் பாதிக்கப்பட்டு 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் தனது வலதுகை கட்டை விரலை இழந்துள்ளார்.
    லண்டன்:

    பிரிட்டனின் கவுண்டி துர்ஹாம் பகுதியை சேர்ந்தவர் விதோர்ன். 20  வயதான கல்லூரி மாணவியான இவருக்கு அடிக்கடி நகம் கடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. சிறு வயது முதலே இந்த பழக்கம் இருக்கிறது என கூறியுள்ள விதோர்ன், இதனால் தனது விரலை இழந்ததோடு கேன்சர் நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

    ஓயாமல் நகம் கடித்ததன் காரணமாக வலது கையில் உள்ள கட்டை விரல் நான்காண்டுகளுக்கு முன் கறுப்பாக மாற தொடங்கியது. கையுறகள் கொண்டு மூடி மறைத்து வந்த அவர், வலி தாங்க முடியாமல் சமீபத்தில் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது விரலை பரிசோதனை செய்த பின்னர் தான் acral lentiginous subungual melanoma என்ற அரிய வகை கேன்சரால் விதோர்ன் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இதன் பின்னர், நான்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது கட்டை விரல் அகற்றப்பட்டது. எனினும், கேன்சரை முழுமையாக அகற்ற முடியவில்லை. தற்போது, மருத்துவமனையில் இருக்கும் விதோர்ன், விரலை இழந்தாலும் உடல்நலம் தேறி வருகிறார்.
    தான் செல்லமாக வளர்த்த நாய் நாக்கால் நக்கியதின் விளைவாக, நாயின் எச்சில் மூலம் நோய்த்தொற்று உடலில் பரவி கை, கால் உள்ளிட்ட உடல் பகுதிகளை இழந்துள்ளார்.

    செல்லமாக வீட்டில் பிராணிகளை வளர்க்க நினைப்போரின் முதல் தேர்வே நாய் தான். மிகுந்த பராமரிப்புடன் வளர்க்கப்பட்டாலும் பிராணிகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியை சேர்ந்த க்ரெக் மண்டவுபெல் என்ற 48 வயது நபர் வளர்த்த நாயே அவருக்கு வினையாகிப்போயுள்ளது.

    தன்னுடைய நாய் நாக்கால் தன்னுடைய உடல் பாகங்களை நக்கும் போது, அதனை கண்டுகொள்ளாமல் இருந்த க்ரெக் கடும் காய்ச்சல், வாந்தி போன்றவற்றால் அவதிக்குள்ளாகியுள்ளார். தொடக்கத்தில் சாதரணமாக எடுத்துக்கொண்டதன் விளைவாக உடல் முழுவதும் ஆங்காங்கே புண் ஏற்பட்டுள்ளது.

    இதனை அடுத்து மருத்துவமனைக்கு சென்ற பின்னர்தான், அவரது உடலில் பதோகென் (pathogen) என்ற பாக்டீரியா கலந்துள்ளது தெரியவந்துள்ளது. நாய் அவரை நக்கும் போதோ அல்லது கடிக்கும் போதோ எச்சில் வழியாக இந்த பாக்டீரியா அவரது ரத்தத்தில் கலந்துள்ளது.

    இதன் விளைவாக, அவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை அழுகிய நிலைக்கு செல்லவே உடனே அந்த உறுப்புகள் அவரது உடலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. முகத்தில் இருக்கும் மூக்கும் அழுகிப்போக தற்போது அது நீக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கொண்ட க்ரெக்கை இந்த பாக்டீரியா வேகமாக தாக்கியுள்ளது. பாக்டீரியாவை செயலிழக்க வைக்கும் நோய் தடுப்பு சக்தி அவருக்கு இல்லாமல் போனது முக்கியமான காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
    ×