search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Aishwarya Rai"

  • பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
  • நாட்டின் 73 சதவீத மக்களான ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் கலந்து கொள்ளவில்லை.

  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த மாதம் ராமர் சிலை பிரதிஷ்டை, ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் நேரடியாக கலந்து கொள்ள நாட்டில் உள்ள பெரும்பாலான பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பெரும்பாலானோர் நேரில் கலந்து கொண்டனர்.

  பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அவரது மகனும் நடிகருமான அபிசேக் பச்சன், அபிசேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

  அழைப்பிதழ் தொடர்பாக எதிர்க்கட்சிகள் பா.ஜனதா மற்றும் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

  இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் அழைக்கப்பட்டனர். அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

  அவர்களும் கலந்து கொண்டனர். ஆனால் ஓபிசி, தலித் அல்லது பழங்குடியினர் என யாரும் கலந்து கொள்ளவில்லை. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 73 சதம்வீதம் பேர் எனத்தெரிவித்திருந்தார்.

  இதற்கிடையே ஐஸ்வர்ரா ராய் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

  இந்த நிலையில் ராகுல் காந்தியை பா.ஜனதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. "இந்திய மக்களால் தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட விரக்தியில் ராகுல் காந்தி இந்தியாவின் பெருமைக்குரிய ஐஸ்வர்ரா ராயை இழிவுப்படுத்தும் புதிய மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார்.

  நான்காவது தலைமுறை அரசியல் வம்சம், எந்தவித சாதனையும் இல்லாததோடு, ராகுல் காந்தியின் முழு குடும்பத்தையும் விட இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஐஸ்வர்யா ராய் மீது இப்போது அவதூறுகளை கையாள்கிறார்." எனத் தெரிவித்துள்ளார்.

  ஐஸ்வர்யா ராயை இழிவு படுத்தும் வகையில் ராகுல் காந்தி பேசிய பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ள பா.ஜனதா, கர்நாடகத்தை சேர்ந்தவர் இழிவுப்படுத்தப்படும்போது சித்தராமையா அமைதியாக இருக்கிறார் எனவும் விமர்சனம் செய்துள்ளது.

  "உங்களுடைய தலைவர் தொடர்ந்து சக கன்னடியரை இழிவு படுத்தும் நிலையில், உங்கள் கன்னட பெருமையை நிலைநாட்டி, அத்தகைய அவமரியாதைக்கு எதிராக பேசுவீர்களா அல்லது உங்கள் முதல்வர் நாற்காலியை பாதுகாக்க அமைதியாக இருப்பீர்களா? என சித்தராமையாவுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை.
  • 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டுமே வென்றது.

  லாகூர்:

  உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை. மொத்தம் 9 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் மட்டும் வென்று, 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

  சமீபத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷாகித் அப்ரிடி, அப்துல் ரசாக், உமர் குல் ஆகியோர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அப்துல் ரசாக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

  அதற்கு பதிலளித்த ரசாக், யூனிஸ் கான் நல்ல கேப்டனாக இருந்தார். அவர் எனக்கு உத்வேகத்தையும், உறுதியையும் வழங்கினார். இப்போது இங்கு இருக்கும் அனைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி குறித்து பேசி வருகிறோம்.

  பாகிஸ்தான் வீரர்களில் பெரும் கோடீஸ்வரராக இருப்பவரும் கோலி கிட்ட நெருங்கவே முடியாது.

  உண்மையில் பாகிஸ்தானில் வீரர்களை உருவாக்கி அவர்களை மெருகூட்டி விளையாட வைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் எங்களுக்கு இல்லை.

  பக்தியுள்ள குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஐஸ்வர்யா ராயை ஒருவர் திருமணம் செய்தால் அது சாத்தியமில்லை என கிண்டலாக கருத்து தெரிவித்தார்.

  அப்துல் ரசாக்கின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

  இந்நிலையில், ஐஸ்வர்யா ராய் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், எனது பெயர் அப்துல் ரசாக். நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் நான் கிரிக்கெட் மற்றும் பயிற்சி பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேசும்போது நான் ஐஸ்வர்யா ராயின் பெயரை தவறாகப் பயன்படுத்தினாலும் இன்னொரு உதாரணத்தை மேற்கோள் காட்ட விரும்பினேன். அதைச் செய்திருக்கக் கூடாது. நான் அவரிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

  • மீன்களில் சிலவகை எண்ணெய் உள்ளன. இது கன்னத்தை மிருதுவானதாக வைத்திருக்கும்
  • மற்றவர்கள் பார்த்தால், அவர்கள் ஈர்க்கப்டுவார்கள்

  மகாராஷ்டிரா மாநில பா.ஜனதா மந்திரி விஜயகுமார் காவிட், தினந்தோறும் மீன் சாப்பிட்டால், ஐஸ்வர்யா ராய் போன்று கண்கள் அழகாக இருக்கும்'' எனக் கூறியதாக வெளியான வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  மகாராஷ்டிரா மாநில பழங்குடியின மந்திரி விஜயகுமார் காவிட், நந்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

  அவர் அந்த வீடியோவில் ''தினந்தோறும் மீன் சாப்பிடுபவர்களின் கன்னங்கள் மிருதுவானதாக இருக்கும். கண்கள் பளிச்சென பளபளக்கும். யாராவது அவர்களை பார்த்தீர்கள் என்றால், அவர்களால் ஈர்க்கப்படுவீர்கள்.

  நான் ஐஸ்வர்யா ராய் பற்றி கூறினேனா?. அவர் மங்களூருவில் கடற்கரையோரம் வசித்தவர். தினமும் அவர் மீன் சாப்பிடிக்கனும். அவர் கண்களை பார்த்தீர்களா? அவரை போன்ற கண்களை நீங்கள் பெறுவீர்கள். மீனில் சிலவகை எண்ணெய் உள்ளன. அது உங்களுடைய கன்னங்களை மிருதுவாக வைத்திருக்கும்'' என்றார்.

  இதற்கு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ., அமோல் மிட்கரி ''மந்திரி இதுபோன்று அற்பமான கருத்துகளை வெளிப்படுத்துவதைவிட, பழங்குடியின மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும்.'' என்றார்.

  பா.ஜனதா எம்.எல்.ஏ., நிதேஷ் ராணே, ''நான் தினந்தோறும் மீன் சாப்டுகிறேன். என் கண்கள் ஐஸ்வர்யா ராய் கண்கள் போன்று இருந்திருக்க வேண்டும். இதுகுறித்து ஆராய்ச்சி ஏதும் உள்ளதா? என்று அவரிடம் கேட்க இருக்கிறேன்'' என்றார்.

  • கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.
  • இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.

  ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பிறகும் நடிகர்-நடிகைகளின் சம்பளம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சம்பளத்தின் மூலமாக அதிக சொத்துகள் சேர்த்த ஆசிய நடிகைகள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

  இதில் சீனாவை சேர்ந்த பேன் பிங் பிங் என்ற நடிகை முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிக சொத்து மதிப்பு மட்டுமல்லாது, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவரே முன்னிலையில் உள்ளார். இவரது சம்பளம் 20 மில்லியன் டாலர். கடந்த 2018-ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததற்காக 3 மாதம் தலைமறைவாக இருந்த நடிகை பிங் பிங், பிறகு சமூகவலைதளத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

  இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.

  ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக, 3 மற்றும் 4-வது இடங்களில் முறையே பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் உள்ளார்கள். இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.

  • மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
  • இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "ஆழி மழைக்கண்ணா" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹரினி குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.  • மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
  • இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


  பொன்னியின் செல்வன் 2

  பொன்னியின் செல்வன் 2

  பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற சிவோகம் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சத்யபிரகாஷ், டாக்டர் நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், நிவாஸ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்பகராஜ், டிஎஸ் ஐயப்பன் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

  • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’.
  • இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

  மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


  பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம் பெற்ற (சின்னஞ்சிறு மறுமுறை) பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  • மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
  • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

  விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.


  பொன்னியின் செல்வன் -2

  'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தை வெளிநாட்டு ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விக்ரமின் பதிவு சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புரோமோஷனின் போது ஐஸ்வர்யா ராயுடன் ஜாலியாக விளையாடிய வீடியோவை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


  • அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன்.
  • இவர் ஐஸ்வர்யா ராயுடன் அடிக்கடி விருது நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.

  அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சன் (12). அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும் சினிமா விழாக்களுக்கும் சென்று வருகிறார். சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூ டியூப் சேனல்கள் வதந்தியை பரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இதையடுத்து தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்தியா பச்சன் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

  ஆராத்யா தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆராத்யா பச்சனின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை இணையதளங்கள் நிறுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  நீதிபதி சி. ஹரி சங்கர் கூறியதாவது:- பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, சாமானியரின் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன்நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் சகிக்க முடியாதது என கூறினார்.

  • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது.
  • இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது.

  மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையுரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரம் பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
  இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சிலம்பரசன், அமைச்சர் துரை முருகன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்கள் சோழர் அரியணையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வீடியோவை படக்குழு இணையத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

  இப்படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.