என் மலர்
சினிமா செய்திகள்

மகளை நினைத்து கவலை கொள்ளும் அபிஷேக் பச்சன்
- ஏன் இப்படி பரவுகின்றன? என்று நினைத்து மனம் வருத்தம் கொள்கிறது.
- பார்க்கும் எதையும், கேட்கும் எதையும் நம்பமாட்டார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற 14 வயது பெண் குழந்தை உள்ளது.
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற்று பிரியப்போவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் இருவருமே இணக்கமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் வதந்திகளால் மனம் வருந்துவதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ''விவாகரத்து வதந்திகள் உண்மையில்லை என்றாலும், ஏன் இப்படி பரவுகின்றன? என்று நினைத்து மனம் வருத்தம் கொள்கிறது. என் மகளை பொறுத்தவரை பகுத்தறிவதில் கெட்டிக்காரர். பார்க்கும் எதையும், கேட்கும் எதையும் நம்பமாட்டார். ஆதாரமற்ற விஷயங்களை, வதந்திகளை நம்பக்கூடாது என்று என் மகளுக்கு ஐஸ்வர்யா ராய் சொல்லித்தந்திருக்கிறார். அது எனக்கு ஆறுதலாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் இருந்தாலும் தேவையற்ற விஷயங்களை பொருட்படுத்த மாட்டார், இருந்தாலும் என் மகளை பற்றி கவலையாக இருக்கிறது'' என்றார்.






