என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்வர்யா ராய்"

    • சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்
    • பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இன்று நடைபெற்ற சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார். அதன்பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், "ஒரே ஒரு இனம் தான், அது மானுட இனம். ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான், அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர்" என்று தெரிவித்தார்.

    ஐஸ்வர்யா ராயின் இந்த பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    • அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார்.
    • ஆராத்யா தான் என் குடும்ப பெருமை.

    'உலக அழகி' பட்டத்துடன் சினிமாவில் நுழைந்த ஐஸ்வர்யா ராய், தனது நடிப்பால் பாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழில் 'இருவர்', 'ஜீன்ஸ்', 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 'ராவணன்', 'எந்திரன்', 'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    அமிதாப்பச்சன் மகனும், முன்னணி இந்தி நடிகருமான அபிஷேக் பச்சனை 2007-ம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற 13 வயது பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையில் ஆராத்யா குறித்து அபிஷேக் பச்சன் பேசியுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.



    அவர் கூறும்போது, ''என் மகள் எந்த சமூக ஊடகங்களிலும் இல்லை. செல்போனிலும் மூழ்கி கிடப்பதில்லை. அவரது இந்த நிலைக்கு காரணம் என் மனைவி தான். ஆராத்யா தான் என் குடும்ப பெருமை. அவரை சிறப்பாக வளர்த்ததில் என் மனைவியை மட்டுமே பெருமைகள் சேரும்'', என்றார்.

    • பிரான்ஸ் நாட்டில் 78-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
    • இந்த விழாவில் பிரபலமான சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார்.

    பிரான்ஸ்:

    பிரான்ஸ் நாட்டில் 78-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்ட நிலையில், பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை பல பிரபலங்களும் வருடா வருடம் படையெடுத்து சென்று வருகின்றனர்.

    வருடாவருடம் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராயின் பிரத்யேக உடையைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

    இந்நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரபலமாக இருக்கும் சிவப்பு கம்பளம் நிகழ்வில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனக்கான அழகு உடையுடன் நடை போட்டார். வெள்ளை நிற பனாரஸ் புடவையில் சிறப்பு வேலைப்பாடுகளுடன் உருவான அந்தப் புடவை அனைவரையும் கவர்ந்தது.

    கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்று வருகிறார் என்பது

    குறிப்பிடத்தக்கது.

    • மும்பையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் கார் மீது பேருந்து ஒன்று மோதியது.
    • இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    மும்பை:

    பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மருமகள் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன்.

    மும்பையில் நேற்று ஐஸ்வர்யா ராய் பச்சனின் கார் மீது பேருந்து ஒன்று மோதியது. அவரது மெய்க்காப்பாளர்கள் நிலைமையை கண்டு காரை விட்டு வெளியே வந்தனர். இந்தச் சம்பவத்தால் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.


    இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டனர். இந்தச் சம்பவத்தின்போது நடிகை ஐஸ்வர்யா ராய் காரில் இல்லை என அறிந்து ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    நடிகை ஐஸ்வர்யா ராயின் கார் மீது பேருந்து மோதியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அஜித் நடிப்பில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.


    அஜித் - விக்னேஷ் சிவன்

    இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஏகே62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியான 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராய்.
    • நில வரி செலுத்தாத நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மராட்டிய மாநில நில வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், எந்திரன் படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் கடந்த செப்டம்பர் மாதம் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.


    ஐஸ்வர்யா ராய்

    ஐஸ்வர்யா ராய்

    இந்நிலையில் மராட்டிய மாநில நில வருவாய் துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இதற்கு ஓராண்டாக நில வரி ரூ.21 ஆயிரத்து 960 செலுத்தவில்லை என்றும், பல தடவை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பியும் வரியை செலுத்தாததால் ஐஸ்வர்யா ராய்க்கு சின்னார் தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    10 நாட்களுக்குள் நில வரியை செலுத்தாவிட்டால் ஐஸ்வர்யா ராய் மீது நில வருவாய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபோல் அங்கு நிலம் இருந்து வரி செலுத்தாத மேலும் 1200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    • அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன்.
    • இவர் ஐஸ்வர்யா ராயுடன் அடிக்கடி விருது நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்.

    அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகளான ஆராத்யா பச்சன் (12). அடிக்கடி அம்மா ஐஸ்வர்யா ராயுடன் விருது விழாக்களுக்கும் சினிமா விழாக்களுக்கும் சென்று வருகிறார். சமீபத்தில் ஆராத்யாவின் உடல்நலம் சரியில்லை என்றும் அவருக்கு அரிய வகை நோய் உள்ளதாகவும் யூ டியூப் சேனல்கள் வதந்தியை பரப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தவறான உள்நோக்கத்துடன் இப்படியொரு வதந்தியை பரப்பிய சுமார் 10 யூடியூப் சேனல்கள் மீது ஆராத்தியா பச்சன் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் செய்த தவறுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் என ஆராத்யா பச்சன் வழக்கறிஞர்களான ஆனந்த் மற்றும் நாயக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

    ஆராத்யா தான் மைனர் என்பதால் ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆராத்யா பச்சனின் ஆட்சேபனைக்குரிய வீடியோக்களை வெளியிடுவதை இணையதளங்கள் நிறுத்த வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நீதிபதி சி. ஹரி சங்கர் கூறியதாவது:- பிரபலங்களின் குழந்தையாக இருந்தாலும் சரி, சாமானியரின் குழந்தையாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு குழந்தையும் மரியாதையுடன்நடத்தப்படுவதற்கு உரிமை உண்டு. குழந்தையின் மன மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது முற்றிலும் சகிக்க முடியாதது என கூறினார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

    விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.


    பொன்னியின் செல்வன் -2

    'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தை வெளிநாட்டு ரசிகர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விக்ரமின் பதிவு சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் புரோமோஷனின் போது ஐஸ்வர்யா ராயுடன் ஜாலியாக விளையாடிய வீடியோவை நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’.
    • இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம் பெற்ற (சின்னஞ்சிறு மறுமுறை) பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.



    • மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


    பொன்னியின் செல்வன் 2

    பொன்னியின் செல்வன் 2

    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற சிவோகம் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. சத்யபிரகாஷ், டாக்டர் நாராயணன், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், நிவாஸ், அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்பகராஜ், டிஎஸ் ஐயப்பன் ஆகியோர் பாடியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

    • மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "ஆழி மழைக்கண்ணா" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹரினி குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.



    • கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.
    • இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.

    ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கு பிறகும் நடிகர்-நடிகைகளின் சம்பளம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அந்தவகையில் சம்பளத்தின் மூலமாக அதிக சொத்துகள் சேர்த்த ஆசிய நடிகைகள் பட்டியல் வெளியாகி இருக்கிறது.

    இதில் சீனாவை சேர்ந்த பேன் பிங் பிங் என்ற நடிகை முதலிடம் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.900 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிக சொத்து மதிப்பு மட்டுமல்லாது, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலிலும் இவரே முன்னிலையில் உள்ளார். இவரது சம்பளம் 20 மில்லியன் டாலர். கடந்த 2018-ம் ஆண்டு வரி ஏய்ப்பு செய்ததற்காக 3 மாதம் தலைமறைவாக இருந்த நடிகை பிங் பிங், பிறகு சமூகவலைதளத்தில் அதற்காக மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு அடுத்த இடத்தில் இந்தியாவை சேர்ந்த ஐஸ்வர்யா ராய் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல கூகுளில் அதிகம் தேடப்படும் ஆசிய நடிகை பட்டியலிலும் முதல் பத்து இடங்களில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார்.

    ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்தபடியாக, 3 மற்றும் 4-வது இடங்களில் முறையே பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் உள்ளார்கள். இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாக கருதப்படும் பிரியாங்கா சோப்ராவின் சொத்து மதிப்பு ரூ.760 கோடி என கூறப்படுகிறது.

    ×