கிளைமேக்ஸ் காட்சி பாடலின் வீடியோ வெளியிட்ட 'பொன்னியின் செல்வன் 2' படக்குழு

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
பொன்னியின் செல்வன் 2
பொன்னியின் செல்வன் 2
Published on

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் இடம் பெற்ற (சின்னஞ்சிறு மறுமுறை) பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com