search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஆழி மழைக்கண்ணா பாடல் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன்-2 படக்குழு
    X

    "ஆழி மழைக்கண்ணா" பாடல் வீடியோவை வெளியிட்ட "பொன்னியின் செல்வன்-2" படக்குழு

    • மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.



    பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலை குவித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற "ஆழி மழைக்கண்ணா" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஹரினி குரலில் வெளியாகியுள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.



    Next Story
    ×