என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாய் பாபா"

    • சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார்
    • பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார்.

    ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் இன்று நடைபெற்ற சத்ய சாய் பாபாவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் கால்களை தொட்டு ஐஸ்வர்யா ராய் வணங்கினார். அதன்பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐஸ்வர்யா ராய், "ஒரே ஒரு இனம் தான், அது மானுட இனம். ஒரே ஒரு மதம் தான், அது அன்பின் மதம். ஒரே ஒரு மொழி தான், அது உள்ளத்தின் மொழி. கடவுள் ஒருவரே, அவர் எங்கும் நிறைந்தவர்" என்று தெரிவித்தார்.

    ஐஸ்வர்யா ராயின் இந்த பேச்சு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

    • மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும்.
    • சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு சிறப்புவாய்ந்த நாளாகவும் அந்த தெய்வத்திற்கான வழிபாட்டு நாளாகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சாய்பாபா தான்.

    எந்த பக்தர்கள் அவரை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வணங்குகிறார்களோ, சாய்பாபா அவர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும்

    வியாழன் அன்று சாய்பாபாவை வழிபடுவது மங்களகரமானதாகவும் மிகப்பெரிய நெருக்கடிகள் நீங்கி, பலன் தருவதாகவும் நம்பப்படுகிறது அல்லது கருதப்படுகிறது.

    சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற, வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். இது தவிர இந்த நாளில் சாய்பாபாவை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.

    வியாழன் வழிபாடு:

    வியாழன் அன்று வீட்டின் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். இது தவிர, சாய்பாபாவை வணங்கும் போது, சாய் கதாவை மனதிலிருந்து கூறவும். இதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மத நம்பிக்கையின்படி, சாய் பூஜையின் போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் இதயத்தில் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவின் பஜனையும் கீர்த்தனையும் செய்யும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

    வியாழக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரங்கள்:

    மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும். மனக்குறை நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பெருகும். அதிலும் குறிப்பாக வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லி வர வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பது ஐதீகம்...

    1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

    சச்சிதானந்தாய தீமஹி

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    2. ஷீரடி சாய் பாபாவின் த்யான ஸ்லோகம்:

    பத்ரி க்ராம ஸமத் புதம்

    த்வாரகா மாயீ வாசினம்

    பக்தா பீஷ்டம் இதம் தேவம்

    ஸாயி நாதம் நமாமி.

    3.நினைத்த காரியம் நடக்க:

    "ஓம் சாய் குருவாயே நமஹ

    ஓம் ஷீரடி தேவாயே நமஹ

    ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ"

    தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி "ஸ்ரீ சாய் பாபாவை" மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும். இதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும். உங்கள் மனதில் இருந்த இனம் புரியாத பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    சாய் பாபாவிற்கு உகந்த நிறம்:

    மஞ்சள் நிறம் வியாழக்கிழமைக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் சாய் பாபாவுக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    குருவும், சாய் பாபாவும்:

    குருவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆனாலும் தினமும் குருவை வணங்குவது மகத்துவமானது என்கிறார்கள் சாய் பாபா பக்தர்கள். அதுபோல தினமும் சாய் பாபாவை ஒரு பத்துநிமிடமாவது வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது சாய் பக்தர்களின் நம்பிக்கை.

    • பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் ஜெயா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சர்வ சாய்பாபா ஆலயம் ஸ்ரீ மகா வல்லப கணபதி ஆலயத்தில் சாய்ராம் தியானம் கூடத்தில், சாய்பாபா பிறந்தநாள், ராம நவமியை முன்னிட்டு மூலவர் சாய்பாபாவை பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

    மேலும் மூலவர் சாய்பாபாவிற்கு காக்கடர்த்தி, பாலாபிஷேகம் கலெக்டர் அபிஷேகம் துணி பூஜை மதிய ஆர்த்தி, சந்தியா ஆர்த்தி ஷோஜே ஆர்த்தி சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடைபெற்றது.

    சர்வ சாய்பாபாவுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

    • நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார்.

    நடிகர் விஜய் தற்பொழுது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் இப்படத்தில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக கேரளா சென்று இருந்தார். கேரளா ரசிகர்கள் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தார்கள். பின் இப்பொழுது கோட் படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.

    இந்நிலையில் விஜய் சாய் பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அங்கு பணிப்புரியும் குருக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார்.
    • தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது விபூதியை தடவினார்.

    பகவான் சாய் பாபா இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஷீரடி சாய் பாபாவின் பரம பக்தரான ஒருவரது மனைவி, பிரசவம் ஆன இரண்டு நாள் கழித்து திடீரென்று வயிறு உப்பி மூச்சு விடமுடியாமல் கஷ்டப்பட்டார்.

    பிரசவம் பார்த்த பெண் மருத்துவர், அந்தப் பெண்மணியை உடனடியாக வேறு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு சொல்லிவிட்டார். அதைக் கேட்டு கூடியிருந்த அனைவரும் அழ ஆரம்பித்து விட்டனர்.

    அந்த சமயத்தில் அந்தப் பெண்ணின் கணவரான பக்தர், பாபா, தயவு செய்து எனது மனைவியைக் காப்பாற்று! என்று சத்தம்போட்டு பிரார்த்தித்தார். பின்னர் தன் மனைவியின் வலது மணிக்கட்டில் புனித கயிறைக் கட்டி, உப்பிய வயிற்றுப் பகுதியில் சிறிது விபூதியை தடவினார். கொஞ்சம் விபூதியை அவரது வாயில் இட்டார்.

    இது நடந்த ஐந்து நிமிடத்தில் உப்பியிருந்த வயிறு மீண்டும் சகஜ நிலைக்கு வந்து விட்டது. அந்தப் பெண் சீராக கவாசிக்கத் தொடங்கினாள். சாய் பாபா மீது நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்தவரை அவர் ஒருபோதும் கைவிடமாட்டார். அவரது விபூதியே மருந்தாக விளங்கும் என்பதை எல்லோரும் உணர்ந்தார்கள்.

    ×