என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாய் பாபாவின் இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும் நினைத்தது நிறைவேறும்...!
    X

    சாய் பாபாவின் இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும் நினைத்தது நிறைவேறும்...!

    • மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும்.
    • சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வத்திற்கு சிறப்புவாய்ந்த நாளாகவும் அந்த தெய்வத்திற்கான வழிபாட்டு நாளாகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வியாழக்கிழமை என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சாய்பாபா தான்.

    எந்த பக்தர்கள் அவரை உண்மையான பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வணங்குகிறார்களோ, சாய்பாபா அவர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. மேலும்

    வியாழன் அன்று சாய்பாபாவை வழிபடுவது மங்களகரமானதாகவும் மிகப்பெரிய நெருக்கடிகள் நீங்கி, பலன் தருவதாகவும் நம்பப்படுகிறது அல்லது கருதப்படுகிறது.

    சாய் பாபாவின் சிறப்பு ஆசிகளைப் பெற, வியாழன் அன்று விரதம் இருப்பது நன்மை தரும். இது தவிர இந்த நாளில் சாய்பாபாவை வழிபட வேண்டும் என்ற விதியும் உள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் நீக்கும்.

    வியாழன் வழிபாடு:

    வியாழன் அன்று வீட்டின் அருகில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும். இது தவிர, சாய்பாபாவை வணங்கும் போது, சாய் கதாவை மனதிலிருந்து கூறவும். இதன் மூலம் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். மத நம்பிக்கையின்படி, சாய் பூஜையின் போது சாய் பாபா தொடர்பான மகா மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். இந்த விசேஷ நாளில் இதயத்தில் உண்மையான பக்தியுடன் சாய்பாபாவின் பஜனையும் கீர்த்தனையும் செய்யும் பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.

    வியாழக்கிழமை சொல்ல வேண்டிய மந்திரங்கள்:

    மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வர, மனம் லேசாகும். மனக்குறை நீங்கி வீட்டில் மகிழ்ச்சி பெருகும். அதிலும் குறிப்பாக வியாழக்கிழமைகளில் இந்த மந்திரத்தை சொல்லி வர வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும் என்பது ஐதீகம்...

    1. ஸ்ரீ ஷீரடி சாய் பாபா காயத்ரி மந்திரம்:

    ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே

    சச்சிதானந்தாய தீமஹி

    தன்னோ சாய் ப்ரசோதயாத்.

    தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்லது 1008 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    2. ஷீரடி சாய் பாபாவின் த்யான ஸ்லோகம்:

    பத்ரி க்ராம ஸமத் புதம்

    த்வாரகா மாயீ வாசினம்

    பக்தா பீஷ்டம் இதம் தேவம்

    ஸாயி நாதம் நமாமி.

    3.நினைத்த காரியம் நடக்க:

    "ஓம் சாய் குருவாயே நமஹ

    ஓம் ஷீரடி தேவாயே நமஹ

    ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ"

    தினமும் காலையில் குளித்து முடித்த பின்பு இறைவனை வணங்கி "ஸ்ரீ சாய் பாபாவை" மனதார நினைத்து இம்மந்திரத்தை 9 முறை கூறவேண்டும். இதன் மூலம் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும். உங்கள் மனதில் இருந்த இனம் புரியாத பயம் மற்றும் கவலைகளிலிருந்து விடுபடுவீர்கள்.

    சாய் பாபாவிற்கு உகந்த நிறம்:

    மஞ்சள் நிறம் வியாழக்கிழமைக்கு மிகவும் அதிர்ஷ்டமான நிறமாக கருதப்படுகிறது. இந்த நிறம் சாய் பாபாவுக்கும் பிடித்த நிறமாக இருக்கிறது. எனவே இந்த நாளில் சாய் பாபா கோவிலுக்கு செல்லும்போது மஞ்சள் நிறம் அணிந்து செல்வது கூடுதல் சிறப்பாக இருக்கும்.

    குருவும், சாய் பாபாவும்:

    குருவுக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. ஆனாலும் தினமும் குருவை வணங்குவது மகத்துவமானது என்கிறார்கள் சாய் பாபா பக்தர்கள். அதுபோல தினமும் சாய் பாபாவை ஒரு பத்துநிமிடமாவது வணங்கிவிட்டு, அன்றாடப் பணிகளைச் செய்யும் போது, அவர்களின் எல்லா காரியங்களிலும் பாபா உடனிருந்து நிறைவேற்றித் தந்தருள்கிறார் என்பது சாய் பக்தர்களின் நம்பிக்கை.

    Next Story
    ×