search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "needle"

    • பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார்.
    • காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பெரிநாடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இளநிலை பொது சுகாதார செவிலியர்களாக ஷீபா, லுர்த் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர்.

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் வழக்கம்போல் பணியில் இருந்தனர். அப்போது அந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விஷ்ணு பிரசாத் என்பவரின் மனைவி ஸ்ரீலட்சுமி, பிறந்து 75 நாட்கள் ஆன தனது மகள் ஸ்ரீனிகாவுக்கு தடுப்பூசி போடுவதற்கு கொண்டு வந்தார்.

    தாய்-மகள் இருவரையும் தடுப்பூசி போடும் அறைக்கு செவிலியர்கள் அழைத்துச்சென்றனர். பின்பு செவிலியர் ஷீபா குழந்தைக்கு ஊசி போட்டிருக்கிறார். அப்போது குழந்தைக்கு போடப்பட்ட ஊசி சிரிஞ்சில் மருந்து இல்லாததை குழந்தையின் தாய் பார்த்து, அதுபற்றி ஷீபாவிடம் கேட்டிருக்கிறார்.

    ஆனால் அதற்குள் குழந்தைக்கு நர்சு ஊசி போட்டுவிட்டார். இதனால் குழந்தையின் உடலில் காற்று செலுத்தப்பட்டது. இதையடுத்து நர்சு ஷீபா, மருந்து நிரப்ப மறந்துவிட்டேன் என்று கூறிவிட்டு அந்த அறையில் இருந்துவெளியே சென்றுவிட்டார். காலி சிரிஞ்சை உடலில் செலுத்தியதால் ஸ்ரீலட்சுமியின் குழந்தை அழுதபடி இருந்தது.

    இந்த விவகாரம் ஆஸ்பத்திரி முழுவதும் பரவியது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு செவிலியர் மீண்டும் வருவார் என்று ஸ்ரீலட்சுமியிடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் அவரோ குழந்தைக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். மேலும் தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார். சிரிஞ்சில் மருந்து இல்லாமல், காலி சிரிஞ்சை குழந்தை உடலில் ஏற்றிய சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அதன்பேரில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் பணியில் இருந்த நர்சுகளான ஷீபா, லுர்த் ஆகிய இருவருக்கும் இடையே தகராறு நடந்ததும், அப்போது நர்சு ஷீபா கவனக்குறைவாக குழந்தைக்கு சிரிஞ்சில் மருந்து எடுக்காமல் உடலில் செலுத்தியதும் உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில் நர்சுகள் ஷீபா, லுர்த் ஆகிய இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆரம்ப சுகாதார நிலைய நர்சுகள் பணியின் போது சண்டையிட்டது மட்டுமின்றி, கவனக்குறைவாக பணிபுரிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குழந்தையின் உடலுக்குள் மிகக்குறைந்த அளவே காற்று நுழைந்திருப்பதாகவும், அதனால் குழந்தைக்கு உடல்நல பிரச்சினை எதுவும் ஏற்படாது எனவும் குழந்தையின் பெற்றோரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

    • 2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.
    • அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, குழந்தைக்கு மயக்க மருந்து எனப்படும் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.

    இந்நிலையில், அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது.
    • கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபற்றி டீன் ஏற்கனவே பெற்றோரிடம் விளக்கமாக கூறி இருக்கிறார். தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    டாக்டர்களோ, செவிலியர்களோ குழந்தைகளை காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட வாய்ப்பு குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என்று விசாரிப்பதற்காக 3 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு விசாரித்து அறிக்கை தரும். கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆப்பிரிக்கன் காய்ச்சல் எதிரொலியாக 63 பன்றிகள் ஊசி போட்டு கொல்லப்பட்டன.
    • பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அமீர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் ஒரு பன்றி இறந்து கிடந்தது. அந்த பன்றியின் உடலை கால்நடை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது அந்த பன்றி ஆப்பிரிக்கன் காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் ஆப்பிரிக்கன் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 63 பன்றிகளை ஊசிபோட்டு கொல்ல மாவட்ட கால்நடைதுறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த பன்றிகளுக்கு ஊசிபோட்டு கொன்றனர். அதற்காக 18 அடி நீளம், 20 அடி அகலத்தில் குழி வெட்டி பன்றிகளை புதைத்தனர்.

    மாவட்ட கால்நடைதுறை இணை இயக்குநர் கோவில்ராஜா இதுகுறித்து கூறுகையில், ஆப்பிரிக்கன் காய்ச்சலால் பன்றிகள் மட்டுமே பாதிக்கப்படும். வேறு விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவாது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டுவிட்டன. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றார்.

    ×