search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hand"

    • வெங்கடரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.
    • பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், கமலபாடுவை சேர்ந்தவர் வெங்கட ரத்தினம்மா (வயது 78).

    இவரது மகன் வெங்கடேஸ்வரலு, மகள் திருப்பத்தமா என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    கணவர் இறந்து விட்டதால் வெங்கட ரத்தினம்மா மகன் வெங்கடேஸ்வரலு வீட்டில் வசித்து வருகிறார்.

    வயது முதிர்வு மற்றும் சிறுநீரக கோளாறால் வெங்கட ரத்தினம்மா அவதி அடைந்து வந்தார். வெங்கடேஸ்வரலுவின் மனைவி மாமியாருக்கு பணிவிடை செய்ய விருப்பம் இல்லாததால் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஸ்வரலு தனது மனைவியுடன் சேர்ந்து தாயை ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார். நல்கொண்டா அடுத்த மிரியாகுலா அருகே உள்ள வைகுந்தம் என்ற இடத்தில் தாயை இறக்கிவிட்டார்.

    அப்போது வெங்கடரத்தினமா மகனிடம் இங்கே ஏன் என்னை விட்டு செல்கிறாய் வீட்டிற்கு அழைத்துச் செல் என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஸ்வரலு மனைவியுடன் சேர்ந்து தாயின் 2 கைகளையும் பின்புறமாக வளைத்து கையை உடைத்தனர். பின்னர் அங்குள்ள புதரில் தள்ளிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

    அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் வெங்கட ரத்தினம்மா இரவு முழுவதும் வலியால் அலறி துடித்தார். நேற்று காலை கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் அந்த வழியாக வந்தனர்.

    மூதாட்டி அழும் சத்தத்தை கேட்ட அவர்கள் அங்கு சென்று பார்த்த போது வெங்கட ரத்தினம்மா கைகள் உடைக்கப்பட்ட நிலையில் அழுது கொண்டு கிடந்தது தெரியவந்தது.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து நல்கொண்டா கலெக்டர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கட ரத்தினம்மாவை மீட்டனர்.

    அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதையடுத்து வெங்கடேஸ்வரலு, அவரது மனைவி ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் அறிவுரை வழங்கினர்.

    இதுபோல் மீண்டும் தாயை கொடுமைப்படுத்தினால் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.

    பெற்ற தாய் என்றும் பாராமல் கைகளை உடைத்து புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.
    • அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தகவல்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப்ஸ் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால் ஒன்றரை வயது குழந்தையின் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, குழந்தைக்கு மயக்க மருந்து எனப்படும் அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    2 மணி நேரம் அறுவை சிகிச்சையில் குழந்தையின் அழுகிய கை அகற்றப்பட்டது.

    இந்நிலையில், அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் குழந்தை தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும், குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது.
    • கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1½ வயது குழந்தைக்கு கையில் டிரிப் ஏற்றியதில் தவறுதலாக ஊசி போட்டதால் அந்த குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் உடலில் பல பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபற்றி டீன் ஏற்கனவே பெற்றோரிடம் விளக்கமாக கூறி இருக்கிறார். தொடர்ந்து அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    டாக்டர்களோ, செவிலியர்களோ குழந்தைகளை காப்பாற்றத்தான் போராடுவார்கள். தவறுதலாக ஊசி போட வாய்ப்பு குறைவு. ஒருவேளை கவனக்குறைவாக இருந்தார்களா என்று விசாரிப்பதற்காக 3 மருத்துவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த குழு விசாரித்து அறிக்கை தரும். கவனக் குறைவு ஏற்பட்டு இருந்தால் அதற்கான பொறுப்பை அவர்கள் தான் ஏற்க வேண்டும். அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரிவாளால் வெட்டி விட்டு தப்பியதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.
    • அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38) கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (24). இவர்களிடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்த–ன்று அய்யப்பனை, ஞான–பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான செல்வமணி (26), முருகதாஸ் (23) பாலகிருஷ்ணன் (25) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.

    அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானபிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகதாஸ், செல்வமணியை தேடி வருகின்றனர்.ள

    ×