தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது

அரிவாளால் வெட்டி விட்டு தப்பியதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு- 2 பேர் கைது
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம், ஆடுதுறை அருகே உள்ள திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38) கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ் (24). இவர்களிடையே கடந்த 2 ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்த–ன்று அய்யப்பனை, ஞான–பிரகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான செல்வமணி (26), முருகதாஸ் (23) பாலகிருஷ்ணன் (25) ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில் அய்யப்பனின் இடதுகை முழுவதும் துண்டாகி கீழே விழுந்தது.

அப்பகுதியில் இருந்தவ–ர்கள் மீட்டு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானபிரகாஷ், பாலகிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள முருகதாஸ், செல்வமணியை தேடி வருகின்றனர்.ள

X

Maalai Malar
www.maalaimalar.com