search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspend"

    • புதிய பாலங்களை புனரமைக்க நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அரசும் உத்தரவிட்டுள்ளது.
    • குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும்.

    பீகாரில் கடந்த இரண்டு வாரங்களில் மொத்தம் 12 பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததை அடுத்து, 14 பொறியாளர்களை பணி இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    மேலும், புதிய பாலங்களை புனரமைக்க நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசும் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளாக கண்டறியப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது கட்டுமான செலவு விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பொறியாளர்களின் அலட்சியம் மற்றும் கண்காணிப்பு பலனளிக்காததே பாலங்கள் இடிந்து விழுந்ததற்கு முக்கிய காரணம் என பறக்கும் படையினர் அறிக்கை சமர்ப்பித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    மாநில நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சைதன்ய பிரசாத், பொறியாளர்கள் சரியாக கண்காணிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

    முன்னதாக, பீகாரின் சரண் மாவட்டத்தில் நேற்று மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்ததால், கடந்த 17 நாட்களில் இதுபோன்ற சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    இச்சம்பவங்கள் குறித்து பேசிய ஊரகப் பணித் துறை (ஆர்டபிள்யூடி) செயலர் தீபக் சிங், "அராரியாவில் பக்ரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலம் ஜூன் 18ஆம் தேதி சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

    பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மாநில மற்றும் மத்திய குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன.

    • காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார்.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கட்சித் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே புதிய கிரிமினல் சட்டங்களை 'புல்டோசர் சட்டங்கள்' என்று விமர்சித்துள்ளார்.

     

    அவர் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியதாவது, 'மக்களவைத் தேர்தல் முடிவுகளால் மன ரீதியாக பெரும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவினரும் அரசியலமைப்பை மதிப்பது போல் தற்போது நாடகமாடத்  தொடங்கியுள்ளனர்.

    ஆனால் உண்மை என்னவென்றால் தற்போது அமலுக்கு வந்துள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களும் பாராளுமன்றதில் 146 எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதே ஆகும். எனவே இந்தியா கூட்டணி இந்த புல்டோசர் சட்டங்களை பாராளுமன்றத்தில் பொறுத்துக் கொண்டிருக்காது' என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உள்ளே நுழைந்த மர்ம நபர் வண்ணப் புகை குண்டை வீசினார். இதனால் அவையில் கூச்சல் குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசை எதிரித்து அமளியில் ஈடுபட்டனர்.

    இதனால் எதிர்கட்சிகளைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எனவே எதிர்கட்சிகளை சேர்ந்த பெரும்பாலான எம்.பிக்கள் அவையில் இல்லாமலே புதிய கிரிமினல் சட்டங்களை அமல்படுத்தும் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. 

    • கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
    • காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி.

    சண்டிகர் விமான நிலையத்தில், பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார்.

    இதனால், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இந்நிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி நடிகை கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    • நாளை காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.
    • கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் ரீமால் புயல், வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை வடக்கு நோக்கி செல்லும் ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடையும்.

    இந்த தீவிர புயல் வங்காளதேசம் மற்றும் சாகர் தீவு மற்றும் கேபுபாரா இடையே கரையைக் கடக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கரையை கடக்கும் போது மணிக்கு 110-120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நண்பகல் முதல் 21 மணி நேரத்திற்கு விமான சேவை நிறுத்தி வைக்கப்படவுள்ளதாக கொல்கத்தா விமான நிலையம் அறிவித்துள்ளது.

    அதன்படி, நாளை மதியம் 12 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை 21 மணி நேரம் விமானச் சேவை நிறுத்தப்படுகிறது.

    கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    • டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
    • இந்திய மல்யுத்த சம்மேறனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக போராடியவர்.

    மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மீது தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    ஊக்க மருந்து சோதனைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    டோக்கியோவில் நடந்த மல்யுத்த போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் பஜ்ரங் புனியா.

    இவர், இந்திய மல்யுத்த சம்மேறனத்தின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷணுக்கு எதிராக சாக்ஷி மாலிக், வினேஷ் ஆகியோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்.

    • அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி ஆயுதப்படை உதவி ஆணையர் நடவடிக்கை.
    • தப்பியோடிய கைதியை இருமாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

    கோவை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி லெனின் நேற்று முன்தினம் தப்பியோடினார்.

    போக்சோ வழக்கு ஒன்றில், கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்ப அழைத்து வந்தபோது தப்பியோடினார்.

    இந்த விவகாரத்தில், கோவை ஆயுதப்படை காவலர்கள் தனசேகர், பிரவீன், பவின் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    ஆயுள் தண்டனை கைதி தப்பி ஓடிய விவகாரத்தில் அஜாக்கிரதையாக இருந்ததாக கூறி ஆயுதப்படை உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    கோவை ஆயுதப்படை காவலர்கள் தனசேகர், பிரவீன், பவின் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    கேரள மாநிலம் மேபாடி காவல் நிலையத்தில் கோவை ஆயுதப்படை போலீசார் புகார் அளித்ததை அடுத்து, தப்பியோடிய கைதியை இருமாநில போலீசாரும் தேடி வருகின்றனர்.

    • இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம்.
    • மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என அறிவிப்பு.

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அன்றாடப் பணிகளை கண்காணிக்க தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக குழு அமைக்க கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாக அமைப்பை மத்திய அரசு இடைநீக்கம் செய்துள்ள நிலையில், தற்காலிக குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும், மறு அறிவிப்பு வரும் வரை சஸ்பெண்ட் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மக்களவையில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை.
    • பாராளுமன்றத்தில் இதுவரை 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிசம்பர் 13ம் தேதி அன்று மக்களவையில் இரண்டு பேர், கலர் புகை குண்டு வீசினர். இதுதொடர்பாக, பாதுகாப்பு மீறல் குறித்து அமித்ஷாவிடம் இருந்து அறிக்கை கோரி எதிர்க்கட்சிகள் சபை நடவடிக்கைகளை சீர்குலைத்து வருகின்றனர்.

    இதையடுத்து, சபாநாயகர் எடுத்த நடவடிக்கையால் கடந்த டிசம்பர் 14ம் தேதி முதல் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் சபை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள், சபையில் இருந்து எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    அப்போது, மக்களவையில் போராட்டம் நடத்தக் கூடாது என்று காங்கிரஸ் எம்.பி.க்கள் டி.கே.சுரேஷ், தீபக் பைஜ் மற்றும் நகுல்நாத் ஆகியோருக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷங்கள் எழுப்பினர். கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் போராட்டம் நடத்திய உறுப்பினர்களை எச்சரித்து, மூன்று காங்கிரஸ் எம்.பி.க்களின் பெயரையும் கூறினார்.

    அப்போது, "நான் எந்த ஒரு எம்.பி.யையும் காரணமின்றி சஸ்பெண்ட் செய்யவில்லை. நீங்கள் சபையில் காகிதங்களை கிழித்து வீசுகிறீர்கள். எம்.பி.க்கள் என்னிடம் வந்து சஸ்பெண்ட் செய்யச் சொல்கிறார்கள். நான் யாரையும் சஸ்பெண்ட் செய்ய விரும்பவில்லை, ஆனால் நீங்கள் சபையில் பிளக்ஸ் பேனர்களை கொண்டு வருகிறீர்கள். இது சரியல்ல" என்றார்.

    இறுதியில், மக்களவையில் இருந்து டி.கே.சுரேஷ், நகுல்நாத், தீபக் பைஜ் உள்ளிட்ட 3 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    பாராளுமன்றத்தில் இதுவரை 146 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கல்லூரிக்கு வந்தால் மாணவர்களை திருத்துவதற்கு தயாராக உள்ளோம்.
    • மாணவர்கள் பயணிக்கும் பெட்டிகளில் போலீசாரும் உடன் பயணித்து கண்காணிக்க முடிவு.

    சென்னையில் உள்ள புறநகர் ரெயில் நிலையங்களில் ரூட் தல பிரச்சினை காரணமாக தொடர் மோதல் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரெயில் நிலையங்களில் மாணவர்களிடையே மோதல் தொடர்பாக 18 வழக்குகள் பதிவு, 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதேபோல், 3 மாதத்திற்கு முன் மோதலில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் 15 பேரும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    சமீபத்திலும் ரூட் தல பிரச்சினை காரணமாக மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், 30 மாணவர்களை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று மாநிலக்கல்லூரி முதல்வருக்கு ரெயில்வே போலீசார் கடிதம் எழுதினர்.

    இதன் எதிரொலியால், மாநிலக் கல்லூரி மாணவர்கள் 25 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெரும்பாலான மாணவர்கள் கல்லூரிக்கு சரியாக வராதவர்கள் என்றும், எப்போதோ ஒரு நாள் கல்லூரிக்க வருபவர்கள் தான் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    கல்லூரிக்கு வந்தால் அவர்களை திருத்துவதற்கு தயாராக உள்ளோம் என்றது.

    இதைத்தவிர, மாணவர்கள் பயணிக்கும் பெட்டிகளில் போலீசாரும் உடன் பயணித்து கண்காணிக்கவும், ரெயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கவும் ரெயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • மின்சாரம் பாய்ந்து கேங்மேன் காயம்
    • திருச்சி உதவி மின் பொறியாளர் சஸ்பெண்டு


    திருச்சி


    திருச்சி தென்னூரில் உள்ள தலைமை மின்வாரிய பொறியாளர் அலுவ லகத்தின் மலைக்கோட்டை பிரிவில் ராஜீவ் காந்தி என்பவர் கேங்மேனாக பணியாற்றி வருகிறார்.


    இவர் இரு தினங்களுக்கு முன்பு பணியில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து பலத்த காயம் அடைந்தார்.பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


    மின் இணைப்பை துண்டி க்காமல் உரிய பாதுகாப்பு இல்லாமல் 110 கே.வி. மின் கம்பத்தில் ஏறி பணி செய்யு மாறு உயர் அதிகாரி வாய்மொழி உத்தர விட்டதா கவும், மின்சாரம் உள்ள பகுதி களில் அவர்க ளை பணியில் ஈடுபடுத்த கூடாது என்ற விதிக்கு புறம்பாக ராஜீவ் காந்தியை பணி செய்ய வைத்ததால் இந்த விபத்து நடந்ததாக புகார் எழுந்தது. அதைத் தொ டர்ந்து பாதிக்க ப்பட்ட வருக்கு உயரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். விபத்துக்கு காரணமான அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்கள் சார்பில் தென்னூர் மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பா ட்டம் நடந்தது.மேலும் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய பொறி யாளர் அலுவலகம் முன்பும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் மின்வாரிய அதிகாரிகள், கேங் மேன்கள் தரப்பில் நடத்த பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க ப்படும் என உறுதி அளிக்க ப்பட்டது. இதைத் தொட ர்ந்து சம்பந்தப்பட்ட உதவி மின் பொறியாளர் ஆர். சரவ ணன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்ப ட்டுள்ளார்.




    • செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார்.
    • போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அனைத்து போலீசாரும் தங்களது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும், இதில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மறைமலைநகர் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தபோது மாமல்லபுரம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் கோகுல் என்பவர் கஞ்சா வியாபாரிக்கு போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்தது. மாவட்ட போதை தடுப்பு சிறப்பு பிரிவில் உள்ள போலீஸ்காரர் கோகுல் பல குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    • புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
    • மது போதையில் பார் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதால் நடவடிக்கை

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டத்தில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளராக சுந்தர்ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.இவர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் உள்ள பாரில் மது அருந்தியு ள்ளார்.பின்னர் மது போதையில் அங்கு பணியாற்றும் ஊழி யர்ளுடன் தகராறில் ஈடு பட்டுளளார்.இச் சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் வந்திதா பாண்டே வுக்கு புகார் வந்துள்ளது.புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அவர், காவல் உதவி ஆய்வா ளர் சுந்தர்ராஜை பணியிடை நீக்கம் செய்ய திருச்சி சரக டி.ஐ.ஜி. பகலவனிடம் பரிந்துரை செய்தார்.இதையடுத்து சுந்தர்ரா ஜை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி பகலவன் உத்தரவிட்டார்.மது போதையில் விரல் ரேகை பதிவு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் தனியார் விடுதியில் உள்ள பாரில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு தற்போது பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பரபரப்பையும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×