என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாமக எம்எல்ஏக்கள்"

    • சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது.
    • பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர்.

    சென்னை:

    பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. கட்சி இரு பிரிவாக உள்ளது.

    இதில் டாக்டர் ராமதாஸ் பக்கம் ஜி.கே.மணி, அருள் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அன்புமணி பக்கம் வெங்கடேசன், சதா சிவம், சிவகுமார் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இதில் சட்டசபையில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., முதல் வரிசையில் இருக்கிறார். அவரது இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அந்த இருக்கையில் வெங்கடேசனை அமர வைக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அன்புமணி தரப்பில் கடிதம் கொடுத்து இருந்தனர்.

    இந்த விவகாரத்துக்கு இன்று சபாநாயகர் விளக்கம் கொடுத்து உள்ளார். சட்டசபையில் இன்று டாக்டர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ. அருள் பேசி முடித்த நிலையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேச வாய்ப்பு கேட்டு எழுந்து நின்றனர்.

    சபாநாயகர் அவர்களுக்கு விளக்கம் அளித்து பேசியதாவது:-

    சட்டமன்றம் அரசியலமைப்பு சட்டப்படி, பேரவை விதிப்படி, மரபுபடி செயல்படுகிறது. இன்று பிரதான கட்சி ஜெயித்து வெற்றி பெற்றவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். பிரதான எதிர்க்கட்சி 24 எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகமாக இருந்தால் கட்சி அங்கீகாரத்துடன் சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருப்பார்கள்.

    அதைவிட கம்மியாக 8 உறுப்பினர்கள் இருந்தால் அவர்கள் ஒரு குழுவாக, அணியாக இருப்பார்கள். இதுதான் சட்டமன்றத்தின் நடைமுறை. சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சி தலைவருக்கு மட்டும்தான் இருக்கையை எந்த இடத்தில் கொடுக்க வேண்டும் என்று பேரவை விதி சொல்கிறது.

    மீதிமுள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அது சபாநாயகரின் முழு விருப்பம். அதன்படி நான் வைத்திருக்கிறேனே தவிர நினைத்தவுடனே எழுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற வேண்டும் என யாரேனும் கேட்டால் அது நடைமுறைக்கு சாத்தியமில்லை.

    பா.ம.க கட்சி சார்பில் சட்டசபையில் 5 பேர் உள்ளனர். இதில் இன்று நடைபெறும் விவாதத்திற்கு 2 பேர் எழுதி தந்தீர்கள். அதில் அருள், சிவகுமார் ஆகியோர் ஆகும். இதில் யாரை முதலில் கூப்பிடுவேன் என்றால் முதலில் எழுதி கொடுத்திருந்த அருளை கூப்பிடுவேன்.

    நேற்று நீங்கள் என்னிடம் எதுவும் எழுதி கொடுக்காததால் உங்களை பேச அழைக்க முடியவில்லை. ஏதோ ஒரு கட்சி தலைமையகத்தில் எழுதி கொடுத்த தீர்மானத்தை இங்கு கொடுத்து அதை செயல்படுத்த சொன்னால் அது தவறானது.

    இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

    இதை கேட்ட அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சபாநாயகர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சபாநாயகர் எச்சரித்தார். உங்கள் பிரச்சனைகளை சட்டசபைக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள். இங்கு பிரச்சனை செய்தால் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

    இதைத் தொடர்ந்து பா.ம.க. எம்.எல்.எ.க்கள் 3 பேரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.
    • விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    பாமக எம்எல்ஏக்கள் 3 பேரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக ராமதாஸ் தரப்பு அறிவித்துள்ளது. அதன்படி, பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சிவக்குமார், சதாசிவம், வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்களின் அனுமதியோ உத்தரவோ இல்லாமல் எந்தவொரு முடிவையும் கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினர்களோ மற்றவர்களோ கட்சியின் விதிகளின் அடிப்படையில் தன்னிச்சையாக எந்த செயலும் செய்வது கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் ஒழுங்கீன நடவடிக்கை என்று கருதப்படும் என்பது விதி.

    சமீபகாலமாக பாட்டாளி மக்கள் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார். சதாசிவம், வெங்கடேஸ்வரன் மூவரும் கட்சி கட்டுப்பாட்டை மீறி செய்துவரும் செயல் சட்டமன்றக் கட்சித் தலைவர் திரு.தி.கே.மணி அவர்களால் கட்சியின் தலைமைக்கு கொண்டுவரப்பட்டு கட்சியின் தலைமை நிர்வாககுழு அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியதில், அந்த குழு அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் கே.பாலு இவர்களின் செயல்பாடுகள் மற்றும் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களை பொய்யாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாக சொன்ன செயலும் ஒழுங்கீனமான செயல் என்பதை முதற்கட்ட விசாரனையில் தெரியப்படுத்தியதால் அவர்கள் மீது விரிவாக விசாரனை நடத்த வேண்டியிருப்பதால் நால்வரும் கட்சியின் உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

    முழுமையான ஒழுங்குநடவடிக்கைகுழுமுன் விசாரனைக்கு அவர்கள் நால்வரும் ஆதராகி விளக்கம் அளிக்க வேண்டியிருப்பதால் கட்சித் தொண்டர்களும் மற்ற தலைவர்களும் அவர்களிடம் விசாரனை முடியும் வரை எந்த கட்சி சம்மந்தமான தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    விசாரணைக்குழு அவர்கள் நால்வரையும் விசாரனைக்கு அழைத்து விளக்கம் கேட்பதற்கு முழு அதிகாரமும் நிறுவனர் மற்றும் தலைவர் கொடுத்துள்ளார் என்பதையும் தெரியப்படுத்துகிறோம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நேற்று முன்தினம் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
    • அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று ராமதாஸ் கூறியிருந்தார்.

    சென்னை:

    பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.

    இந்த நிலையில், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

    பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்துள்ளனர். புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை நியமிக்கவும் சட்டப்பேரவைச் செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    • பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.
    • உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று நேரமில்லா நேரத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    இதற்கு விளக்கம் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்ட பா.ம.க.வின் எம்.எல்.ஏ.க்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.

    சாதிவாரி கணக்கெடுப்பு கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம். இந்த விளக்கத்திற்கு பின்னரும் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×