என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு - 6 போலீசார் சஸ்பெண்ட்
- காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் உயிரிழந்தார்.
- காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவிலில் பக்தர்களிடம் 10 சவரன் நகைகள் திருட்டு போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில் ஊழியர் அஜித்தை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தியபோது இளைஞர் அஜித் உயிரிழந்தார். இந்த சம்பவத்தையடுத்து அஜித்தின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கோவில் ஊழியர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 6 தனிப்படை போலீசாரை சஸ்பெண்டு செய்து எஸ்.பி. ஆஷித் ராவத் உத்தரவிட்டுள்ளார். கோவில் ஊழியர் உயிரிழந்தது குறித்த வெளிப்படையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story






