என் மலர்
நீங்கள் தேடியது "தகராறு"
- தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
- போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தில் காதலை ஏற்காமல் பேச மறுத்த நிலையில் பள்ளிக்கு சென்ற 12-ம் வகுப்பு மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தன்னை காதலிக்குமாறு முனிராஜ் என்பவன் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை பள்ளிக்கு சென்ற மாணவியை வழிமறித்து காதலிக்க வற்புறுத்தியும் மாணவி மறுத்ததால் ஆத்திரமடைந்த முனிராஜ் கத்தியால் மாணவியை குத்தியுள்ளான். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து அறிந்து வந்த ராமேஸ்வரம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதலிக்க மறுத்த 12-ம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திக் கொன்ற முனிராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்தார்.
- யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. யோகேஷின் அண்ணன் மனைவி அர்ச்சனா. இவர் தனது தங்கையை தான் யோகேஷ் திருமணம் செய்ய வேண்டும் என கூறி வந்தார்.இந்த நிலையில் யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் யோகேஷ் வீட்டிற்கு வந்திருந்தார்.
தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்தார். அப்போது தனது தங்கையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்தார். எனது தங்கையைத் தவிர வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. எனது தங்கைக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறியபடி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து யோகேஷின் மர்ம உறுப்பை வெட்டி வீசி எறிந்தார்.
யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மறுநாள் மனைவியை கொன்ற எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்போதும் போல வேலைக்கு சென்றார்.
- மனைவி பிணத்தை காரில் வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றினார்.
ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள போலீஸ் தலைமை அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் தீபக்குமார் ரவுத். இவரது மனைவி சுபமித்ரா சாஷூ. இவர் போக்குவரத்து போலீஸ்காரராக இருந்தார்.
கணவன்-மனைவிக்கு இடையே ரூ.10 லட்சம் கடன் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்தது. இதனால் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அவர்கள் காரில் சென்றனர். அப்போது மீண்டும் தகராறு வந்ததால் ஆத்திரம் அடைந்த தீபக் குமார் ரவுத் மனைவியை காருக்குள் வைத்து கழுத்தை நெரித்தார். இதில் சிறிது நேரத்தில் சுபமித்ரா சாஷூ இறந்தார்.
பின்னர் அவர் மனைவி பிணத்தை காரில் வைத்துக் கொண்டு ஒரு நாள் முழுவதும் காரில் சுற்றினார். இதையடுத்து புவனேசுவரில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கியோஞ்சி என்ற இடத்தில் யாருக்கும் தெரியாமல் சுபமித்ரா உடலை குழி தோண்டி புதைத்து விட்டு அங்குள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்.
அங்கு சாமி தரிசனம் செய்த தீபக்குமார் செல்பியும் எடுத்துக்கொண்டார்.
மறுநாள் மனைவியை கொன்ற எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எப்போதும் போல வேலைக்கு சென்றார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் மனைவியை காணாததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் சுபத்ராவின் செல்போனையும் ஆய்வு செய்தனர். அதில் அவர் வெளியிட்ட பதிவில் கணவருடன் சண்டை இருந்து வந்ததும், மன அழுத்தம் காரணமாக வாரணாசி, மதுரா உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.
இது பற்றி விசாரித்த போது மனைவியை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
- இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா (வயது 32). இவர், நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார்.
அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயத்தில் சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் இருவரும் தாக்குதலை கைவிடவில்லை.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா மற்றும் அவரது தோழியுமே ஆட்டோ டிரைவர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு சினேகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஜவகர் நகர் ஆர்.டி.சி கிராஸ் சாலையை சேர்ந்தவர் சுக்தேவ் வோடர்கர் (வயது 40). இவர் பிரபல தெலுங்கு டி.வி.யில் தொகுப்பாளராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விவாகரத்து செய்தார். பார்சிகுடா, ஒய்.எஸ்.ஆர் பூங்கா அருகே தனது பெற்றோர் மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சுக்தேவிற்கு மற்றொரு நபருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பெற்றோரை பிரிந்து காதலன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை தன்னுடன் வசித்து வந்த காதலனுடன் சுக்தேவுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் அவரது காதலன் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டார்.
நேற்று இரவு வீட்டு படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சுக்தேவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது மகள் இது குறித்து தனது தாத்தா, பாட்டிக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் சிக்கட்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுக் தேவ் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலனுடன் ஏற்பட்ட தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.
குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் குப்பை கொட்டும் தகராறில் லாரியை ஏற்றி கொல்ல முயன்ற வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். பாலமுருகன், அவரது மனைவி செல்வி, உறவினர் அன்பரசி கைது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாரியை ஏற்றி கொல்ல முயன்ற பாலமுருகன், அவரை தூண்டிவிட்ட அன்பரசி, பூபதி, கதிரவன் ஆகியோர் மீது கொலை முயற்சி, பொதுச்சொத்து சேதம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான பூபதியை ஆத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.
- பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார்.
- பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம் அம்மம்பாளையத்தில் வசிக்கும் அனிதா என்பவர் பக்கத்து வீட்டு அருகே குப்பை கொட்டியதால் அவருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் மோதல் ஏற்பட்டது.
குப்பை கொட்டியதில் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் பூபதி அவரது உறவினரை வைத்து அனிதாவின் கார் மீது லாரியை ஏற்றி உள்ளார். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் பெண்கள் மீது லாரி ஏற்றி கொல்ல முயன்றதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த தகராறு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகன் என்பவரை தேடி வருகின்றனர்.
- ராகேஷ் தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
- புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெங்களூரில் தொட்டகண்ணஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் ராகேஷ். இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி உள்ளார். தற்போது வேலையில்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி கௌரி அனில் சம்பேகர். இவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள்.
இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறு ஏற்படும் போதெல்லாம் ராகேஷே அவரது மனைவி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்றுமுன்தினம் தம்பதிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ராகேஷ், மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் முழு உடலையும் மடித்து ஒரு டிராலி பையில் (சூட்கேஸ்) அடைத்து குளியலறையில் வைத்துவிட்டு மாமியார் வீட்டாருக்கு போன் செய்து உங்கள் மகளைக் கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இதன்பின் புனேவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்த ராகேஷ் உள்ளூர் காவல்நிலையத்திற்கு தற்கொலை என தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், குளியலறையில் இருந்த கௌரி அனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இததையடுத்து புனேவுக்கு தப்பி செல்ல முயன்ற ராகேஷையும் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக போலீசார் கூறுகையில், உடல் துண்டுகளாக வெட்டப்படவில்லை. அது அப்படியே இருந்தது. இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது, மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணையில் தெரியவரும் என்றனர்.
- மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- காயம் அடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாலைசதுரன். இவரது மகன் சாலைமுனீஸ் (வயது 25). இவரது நண்பர் சரவணன் (21).
கத்திக்குத்து
இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சங்கரன்கோவில் டவுண் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓடைத்தெரு பகுதியில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சோலைவேல் மற்றும் அவரது நண்பர் கதிர்வேல்(26)ஆகியோர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அவ்வழியே மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே சாலைமுனீஸ், சரவணன் ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
கைது
மேலும் தடுக்க வந்த மாரிமுத்து, வீராசாமி , சுவாமிநாதன் ஆகியோருக்கும் சரமாரி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 5 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர். தப்பி ஓடிய சோலைவேலை வலைவீசி தேடி வருகின்றனர்.
- 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.
- அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ரமேஷ்குமார் வசித்து வருகிறார். இந்நிலையில் மெல்டில்டா பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கடந்த 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன், முத்துசாமி, அம்பிகா தேவி, ஜெயலட்சுமி, லோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து பிரியதர்ஷினியை பார்த்து இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறி பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிற
து. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் லோகேஸ்வரன் என்பவர் பிரியதர்ஷினி வீட்டின் மீது பாட்டில் வீசி பிரியதர்ஷினி மீது தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சின்னசேலம் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
- தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சீனிவாசபுரம் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மேலவீதியை சேர்ந்த ரகுவரன் (22) மற்றும் அவருடைய சகோதரர் ராஜா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
இதுபற்றி அவர்களிடம் கந்தசாமி கேட்ட போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி மற்றும் ராஜா ஆகிய 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து கந்தசாமி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் ராஜா மற்றும் ரகுவரன் மீது வழக்குப்பதிவு செய்து ரகுவரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டது.
- போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
திருவோணம்:
திருவோணம் அருகே உள்ள காரியாவிடுதி வெட்டி க்காட்டான் தெருவை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 43).
கூலித் தொழி லாளி. இவருக்கும், புது விடுதியை சேர்ந்த ரவி என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரணிபுரம் மதுக்கடை அருகே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது
இந்நிலையில், ரவி சம்பவத்தன்று பீர் பாட்டிலால் வெள்ளை ச்சாமியை குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த வெள்ளைச்சாமி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வெள்ளைச்சாமி அளித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார்.
வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ரவியை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் எனக்கூறி வெள்ளைச்சாமியின் பெற்றோர், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் திருவோணம் காவல் நிலையத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்,






