என் மலர்tooltip icon

    இந்தியா

    உத்தரபிரதேசத்தில் என்ஜினீயரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய அண்ணி
    X

    உத்தரபிரதேசத்தில் என்ஜினீயரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய அண்ணி

    • தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்தார்.
    • யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். என்ஜினீயரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடைபெற இருந்தது. யோகேஷின் அண்ணன் மனைவி அர்ச்சனா. இவர் தனது தங்கையை தான் யோகேஷ் திருமணம் செய்ய வேண்டும் என கூறி வந்தார்.இந்த நிலையில் யோகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் ஆனதால் அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு விடுமுறையில் யோகேஷ் வீட்டிற்கு வந்திருந்தார்.

    தீபாவளி பூஜை முடிந்தவுடன் அர்ச்சனா யோகேஷை தனது அறைக்கு வரவழைத்தார். அப்போது தனது தங்கையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதற்கு யோகேஷ் மறுப்பு தெரிவித்தார். எனது தங்கையைத் தவிர வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. எனது தங்கைக்கு கிடைக்காதவர் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறியபடி வீட்டிலிருந்த கத்தியை எடுத்து யோகேஷின் மர்ம உறுப்பை வெட்டி வீசி எறிந்தார்.

    யோகேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×