சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதில் தகராறு; 5 பேருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது

மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.காயம் அடைந்த 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதில் தகராறு; 5 பேருக்கு கத்திக்குத்து- வாலிபர் கைது
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாலைசதுரன். இவரது மகன் சாலைமுனீஸ் (வயது 25). இவரது நண்பர் சரவணன் (21).

கத்திக்குத்து

இவர்கள் 2 பேரும் சம்பவத்தன்று சங்கரன்கோவில் டவுண் பகுதிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஓடைத்தெரு பகுதியில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சோலைவேல் மற்றும் அவரது நண்பர் கதிர்வேல்(26)ஆகியோர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அவ்வழியே மோட்டார்சைக்கிளில் சென்ற சரவணன் தரப்பினருக்கும், சோலைவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே சாலைமுனீஸ், சரவணன் ஆகியோரை எதிர்தரப்பினர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

கைது

மேலும் தடுக்க வந்த மாரிமுத்து, வீராசாமி , சுவாமிநாதன் ஆகியோருக்கும் சரமாரி குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த 5 பேரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் கதிர்வேலை கைது செய்தனர். தப்பி ஓடிய சோலைவேலை வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com