சின்னசேலம் அருகே பட்டாசு வெடித்ததில் தகராறு: 5 பேர் மீது வழக்குபதிவு

23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது.அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
சின்னசேலம் அருகே பட்டாசு வெடித்ததில் தகராறு: 5 பேர் மீது வழக்குபதிவு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் ரமேஷ்குமார் வசித்து வருகிறார். இந்நிலையில் மெல்டில்டா பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று கடந்த 23-ந்தேதி பிரியதர்ஷினி வீட்டு வாசல் முன்பு பட்டாசு வெடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் வசிக்கும் ராதாகிருஷ்ணன், முத்துசாமி, அம்பிகா தேவி, ஜெயலட்சுமி, லோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து பிரியதர்ஷினியை பார்த்து இங்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று கூறி பிரியதர்ஷினியை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிற

து. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவர்களுக்கு இடையே சமாதானம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து மீண்டும் லோகேஸ்வரன் என்பவர் பிரியதர்ஷினி வீட்டின் மீது பாட்டில் வீசி பிரியதர்ஷினி மீது தாக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியதர்ஷினி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சின்னசேலம் போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com