என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருமணம் செய்ய மறுத்ததால் காதலி கன்னத்தை கத்தியால் கிழித்த காதலன்- போலீசார் விசாரணை
- காயமடைந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
- சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் மேட்டு தெரு அருகே உள்ள கடையில் பணியாற்றி வரும் 24 வயதுடைய பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (வயது26) என்ற வாலிபரும், கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சம்பவத்தன்று காலை மதுபோதையில் வந்த அண்ணாமலை கடையில் வேலை பார்த்து கொண்டிருந்த தனது காதலியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அந்த பெண்ணின் தந்தைக்கு போன் செய்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் காதலி கன்னத்தில் வெட்டி கீறினார். இதில் அவர் வலி தாங்காமல் அலறினார். அவர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை அறிந்து அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.
இதனை தொடர்ந்து காயமடைந்த அந்த பெண்ணை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






