தொழிலாளியை தாக்கியவர் கைது

இருவரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
தொழிலாளியை தாக்கியவர் கைது
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை சேவப்ப நாயக்கன்வாரியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 32) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் சீனிவாசபுரம் பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மேலவீதியை சேர்ந்த ரகுவரன் (22) மற்றும் அவருடைய சகோதரர் ராஜா ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அவர்களிடம் கந்தசாமி கேட்ட போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இதில் படுகாயம் அடைந்த கந்தசாமி மற்றும் ராஜா ஆகிய 2 பேரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து கந்தசாமி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார் அதன்பேரில் போலீசார் ராஜா மற்றும் ரகுவரன் மீது வழக்குப்பதிவு செய்து ரகுவரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com