என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Power board"
- மின்வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
- மின்வேலியில் யானைகள் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்படும்.
ஓசூர், தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் சிக்கி காட்டு யானைகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்க தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மின்வேலியில் யானைகள் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் துண்டிக்கப்படும் வகையில் கருவிகள் பொருத்தப்படும் எனவும் அது சம்பந்தமான நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்தது.
இதனையடுத்து, "மின் வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும்" என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.
- விருதுநகரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார்.
விருதுநகர்
விருதுநகர் மின்பகிர்மான மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் ஆகிய தொழிற் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்ப்ளாயிஸ் பெடரேசன் மாநில இணை செயலாளர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணை தலைவர் திட்ட செயலாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் சவுந்தர பாண்டியன், பெடரேசன் மாநில உப தலைவர் திட்டச் செயலாளர் ஞானகுரு, இளங்கோவன் ஆகியோர் பேசினர்.
கடந்த 16-ந் தேதி ஏற்பட்ட ஒப்பந்தத்தில், 1.12.2019க்குப் பின் பணியில் சேர்ந்த 9,500 கேங்மேன் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணப்ப லன்கள் வழங்காதது, 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியி டங்களை நிரப்புவதற்கு உத்தரவாதம் தரப்படாதது, ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு தினமும் ரூ.480 ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலிக்க படாதது ஆகியவற்றை கண்டித்தும், துப்புரவு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார்.
- நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே உள்ள ராமநா யக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 54). மின்வாரிய ஊழி யரான இவர், நேற்று இரவு அங்குள்ள ட்ரான்ஸ்பார்ம ரில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அந்த பகுதியினர், புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், விஸ்வ நாதனை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதற்கி டையே அங்கு வந்த விஸ்வநாதன் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். போலீ சார் நடத்திய விசா ரணையில், விஸ்வநாதன் மின்சார வாரிய ஆய்வாள ராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மின்வாரிய ஊழியர் விடுமுறையில் சென்ற நிலையில், இவர் டிரான்ஸ்பார்மரில் ஏறி பணி செய்தபோது, எதிர்பா ராத விதமாக மின்சாரம் தாக்கி இறந்தது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.
- மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகர மின்வாரிய செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சை நீதிமன்ற சாலை செயற்பொறியாளர் அலுவலகத்தில் தஞ்சை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடக்கிறது.
எனவே தஞ்சை மாநகர கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம், மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி, நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, காந்திஜி சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, நீலகிரி, மானோஜிப்பட்டி, ரஹ்மான் நகர், ரெட்டி பாளையம் சாலை, சிங்கபெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யாநகர், மேலவெளி பஞ்சாயத்து, தமிழ்ப ல்கலைக்கழகவளாகம் குடியிருப்பு, மாதாக்கோட்டை சாலை, புதிய பஸ்நிலையம், திருவேங்கட நகர், இனாத்துக்கான்பட்டி, நட்சத்திராநகர், நாஞ்சி க்கோட்டை ஆகிய பகுதிகளை சார்ந்த மின்நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதியில்குறை இருப்பின் நேரில் மனு அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மின்வாரியத்தினருக்கான பல்வேறு கடன் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- துணை மின்நிலையங்கள் மற்றும் மின்வாரியப் பணிகளில் சிலவற்றை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
நாமக்கல்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில், இதுவரை மின்வாரிய பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் இடமாறுதலை வாரிய அதிகாரிகளே மேற்கொண்டு வந்தனா். இந்த நடவடிக்கை தற்போது அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மின்வாரியத்தினருக்கான பல்வேறு கடன் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. துணை மின்நிலையங்கள் மற்றும் மின்வாரியப் பணிகளில் சிலவற்றை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படி உயா்வு வழங்கடாத நிலை உள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மின் ஊழியா்களுக்கு எதிரான அரசாணைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், நாமக்கல் மின்பகிா்மான வட்ட மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயா்மட்ட நிா்வாகிகள் கே.ஆனந்த்பாபு, டி.எஸ்.கந்தசாமி, கோவிந்தராஜ், முத்துசாமி, சிட்டுசாமி, முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மின்வாரிய ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.
திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவருடைய மகன் யுவராஜ் (23). சந்திரசேகருக்கும், குண்டடம் பகுதியை சேர்ந்த விஜயகுமாருக்கும் (34) பழக்கம் ஏற்பட்டது. அப்போது சந்திரசேகர், விஜயகுமாரிடம், தனது மகன்படித்து விட்டு வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு விஜயகுமார், தனக்கு மின்வாரிய அதிகாரிகள் பழக்கம் உள்ளதாகவும், அதன்மூலம் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரசேகரின் மகன் யுவராஜ், முதல் தவணையாக ரூ.2 லட்சம், பின்னர் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்தை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் விஜயகுமாரை, யுவராஜால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலீசில் யுவராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் விஜய குமார் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் அங்கு சென்று விஜயகுமாரை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்ததை ஒத்துக் கொண்டார். கைதான விஜயகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்