search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி- வாலிபர் கைது
    X

    திருப்பூரில் மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி- வாலிபர் கைது

    திருப்பூரில் மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி ஜே.ஜே.நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவருடைய மகன் யுவராஜ் (23). சந்திரசேகருக்கும், குண்டடம் பகுதியை சேர்ந்த விஜயகுமாருக்கும் (34) பழக்கம் ஏற்பட்டது. அப்போது சந்திரசேகர், விஜயகுமாரிடம், தனது மகன்படித்து விட்டு வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    அதற்கு விஜயகுமார், தனக்கு மின்வாரிய அதிகாரிகள் பழக்கம் உள்ளதாகவும், அதன்மூலம் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சந்திரசேகரின் மகன் யுவராஜ், முதல் தவணையாக ரூ.2 லட்சம், பின்னர் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சத்தை விஜயகுமாரிடம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் விஜயகுமாரை, யுவராஜால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதையடுத்து திருப்பூர் வீரபாண்டி போலீசில் யுவராஜ் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் விஜய குமார் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் அங்கு சென்று விஜயகுமாரை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரித்தபோது மின் வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்ததை ஒத்துக் கொண்டார். கைதான விஜயகுமார் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #tamilnews
    Next Story
    ×