

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் புதுக்குப்பம் அருகே புதுநகர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் சன்னதி கட்டடத்தால் கட்டப்பட்டு உள்ளது. கோவில் முன்பு உண்டியல் வெட்ட வெளியில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் இந்த கோவிலுக்கு வந்தனர்.
இதனையடுத்து கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றனர். இன்று காலை அந்த வழியாக சென்ற ஊர் பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் குறித்து ஊர் முக்கியஸ்தர்கள் மூலம் கிளியனூர் ேபாலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு வழக்குபதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.