search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழிப்பறி கொள்ளையர்கள் தொடர் கைவரிசை: கோவையில் ஒரே நாளில் 2 பெண்களிடம் நகைபறிப்பு
    X

    வழிப்பறி கொள்ளையர்கள் தொடர் கைவரிசை: கோவையில் ஒரே நாளில் 2 பெண்களிடம் நகைபறிப்பு

    • காய்கறி வாங்கி விட்டு வீடு திரும்பியவரிடம் மோட்டார்சைக்கிள் கும்பல் கைவரிசை
    • மொபட்டில் சென்ற பெண்ணிடமும் 8 பவுன் தங்கச்செயின் கொள்ளை

    கோவை,

    கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மனைவி சந்திரிகா (வயது 56). இவர் மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார்.

    சந்தையில் காய்கறி வாங்கி விட்டு தனது வீடு நோக்கி நடந்து வந்தார். அப்போது வீட்டிற்கு முன்பு மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் சந்திரிகா அருகில் மோட்டார்சைக்கிளை நிறுத்தினர். சந்திரிகா கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க செயினை பறித்து சென்றனர்.

    செயின் பறிக் கும்போது கீழே விழுந்த சந்திரிகா சத்தம் போட்டார். சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்த கணவர் கோபி ஓடி வருவதற்குள் மோட்டார்சைக்கிளில் வந்த திருடர்கள் செயினுடன் தப்பிச் சென்றனர். இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு , வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அதே போன்று சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நிர்மலா (வயது 56). இவர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு தனது மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். பீள மேட்டில் திடீரென மொபட் நிற்கவே, கீழே இறங்கி பெட்ரோல் இருக்கிறதா என சோதித்து பார்த்தார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென நிர்மலா அணிந்திருந்த 8 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்மலா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார்.

    புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் கண்காணிப்பு காமிரா மூலம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×