search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீனா"

    சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத காலமாக போடப்பட்டிருந்த ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது.
    ஷாங்காய் :

    சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது. ஷாங்காய் அதிகாரிகள் வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றத் தொடங்கினர். இதன் மூலம், நகரத்தின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களும் விடுதலை அடைந்தது போல் உணர்ந்தனர்.

    நேற்று முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் மற்றும் மக்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொது இடங்களுக்குள் நுழையவும் பொதுமக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்று முடிவுகள் பெற்றிருக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவருக்கும் அவர்களின் நெருங்கிய தொடர்புகளுக்கும் கடுமையான தனிமைப்படுத்தல் விதி இன்னும் அமலில் உள்ளது.

    எனினும், ஷாங்காய் நகரவாசிகள் இன்னும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் மற்றும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும்.உணவகங்களுக்குள் அமர்ந்து உணவருந்துவது தடை செய்யப்பட்டுள்ளது. கடைகள் 75 சதவீத திறனில் செயல்படலாம் என்பன போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

    ஷாங்காய் நகரில் நேற்று 31 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒரு நாளுக்கு முன்பு 67 ஆக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று சற்று குறைந்தது. சீனாவின் பல நகரங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த கடுமையான ஊரடங்கு, பொதுமக்களிடம் கடும் ஆத்திரத்தை தூண்டியது.

    அவர்கள் தங்கள் வீட்டிலிருந்து பூந்தொட்டி மற்றும் பொருட்களை விரக்தியில் தூக்கி போட்டு உடைத்து தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டினர். இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போதைய சீன அதிபர் ஜி ஜின்பிங் மீதான மக்களின் அதிருப்தியை அதிகரிக்க செய்தது.
    1980-ம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர்.
    பீஜிங் :

    மக்கள்தொகையில் உலகிலேயே முதல் இடத்தில் சீனா இருக்கிறது. உலக மக்கள்தொகையில் 6-ல் ஒரு பங்கு சீனாவில்தான் இருக்கிறது. 40 ஆண்டுகளுக்கு முன்பு சீன மக்கள்தொகை 66 கோடியாக இருந்தது. தற்போது 140 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 1959 முதல் 1961-ம் ஆண்டு வரை பஞ்சம் காரணமாக சீன மக்கள்தொகை குறைந்தது. அதன் பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு மக்கள்தொகை சரிவுப்பாதையில் செல்ல தொடங்கி உள்ளது.

    சீனாவின் தேசிய புள்ளியியல் பிரிவின் கணக்குப்படி, சீன மக்கள்தொகை 141 கோடியே 21 லட்சத்து 20 ஆயிரத்தில் இருந்து 141 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது. அதாவது, ஓராண்டில் மக்கள்தொகை வெறும் 4 லட்சத்து 80 ஆயிரம் மட்டுமே அதிகரித்துள்ளது. கடந்த ஆயிரம் ஆண்டுகளில் மிகவும் குறைவாக வெறும் 0.34 சதவீதமே மக்கள்தொகை உயர்ந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஆண்டொன்றுக்கு மக்கள்தொகை 80 லட்சத்துக்கு மேல் அதிகரிக்கும். எனவே, தற்போதைய வளர்ச்சி மிகவும் குறைவு.

    கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் குறைந்ததுதான் இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது. 1980-களில், ஒரு பெண்ணுக்கு 2.6 என்ற அடிப்படையில் குழந்தை பிறப்பு விகிதம் இருந்தது. ஆனால் தற்போது 1.15 ஆக குறைந்துள்ளது.

    அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் 1.6 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குழந்தைதான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை கடந்த 2016-ம் ஆண்டு சீனா கைவிட்டது. 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு வரிச்சலுகைகளையும், ஊக்கத்தொகையையும் கடந்த ஆண்டு அறிவித்தது.

    இருப்பினும், சிறு குடும்ப முறைக்கு மக்கள் பழகி விட்டதும், வாழ்க்கை செலவு அதிகரித்ததும், திருமண வயது அதிகரித்ததால், குழந்தை பிறப்பு தள்ளிப்போனதும், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது பெண்கள் குறைவாக இருப்பதும் மக்கள்தொகை சரிவடைய தொடங்கி இருப்பதற்கு காரணங்கள் ஆகும். மேலும், 1980-ம் ஆண்டு, ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ளும் கொள்கையை சீனா அறிவித்தவுடன், ஆண் குழந்தை பெற்றுக்கொள்வதில் பெண்கள் ஆர்வம் காட்டினர்.

    இதனால், 100 பெண் குழந்தைகளுக்கு 106 ஆண் குழந்தைகள் என்ற விகிதம், 120 ஆண் குழந்தைகளாக உயர்ந்துள்ளது. இதனால், ஆண்களுக்கு திருமணத்துக்கு பெண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு பெண்ணுக்கு 1.5-ல் இருந்து 1.1 ஆக குறையும் என்றும், 2100-ம் ஆண்டு வரை அதே நிலை தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பணிபுரியும் வயதினர் மக்கள்தொகை 2100-ம் ஆண்டுக்குள் மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடும் என்றும், மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அதன் காரணமாக சீன பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.
    சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காயில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தது
    பீஜிங் :

    சீனாவின் பொருளாதார தலைநகரமான ஷாங்காயில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து ஊரடங்கு பொதுமுடக்கத்தை அரசு அறிவித்தது. 2.5 கோடி மக்கள் வசிக்கிற இந்த நகரில் நீண்ட காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பது மக்களை எரிச்சல்படுத்துகிறது. விரக்தியில் ஆழ்த்தியும் உள்ளது.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அங்குள்ள மக்களில் சிலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி தங்கள் வளாகங்களை விட்டு வெளியேறி தெருக்களில் இறங்கினர்.

    அடுத்த நாள் காலையில் அவர்கள் சுதந்திரமாக தெருக்களில் நடமாடினர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. பல வளாகங்களில் இதே போன்ற நிகழ்வுகள் நடக்கிறதாம்.

    தற்போது அந்த நகரின் 2 கோடியே 10 லட்சம் மக்கள் முன் எச்சரிக்கை மண்டலம் என வரையறுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் சில மணி நேரம் வெளியே செல்லலாம்.

    ஆனால் அதற்கு பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கிடையே ஷாங்காய் நகரில் அடுத்த மாதம் இயல்பு வாழ்க்கை திரும்பி விடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    ஆப்பிள் நிறுவனத்தின் பெரும்பாலான சாதனங்கள் சீனாவில் செயல்பட்டு வரும் உற்பத்தி ஆலைகளிலேயே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. சீனாவின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது.


    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் அதிகப்படுத்த தனது உற்பத்தியாளர்களிடம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவின் பீஜிங் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஐபோன் மற்றும் இதர உதிரிபாகங்கள் உற்பத்தியில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 

    சீனாவுக்கு அடுத்து இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற பகுதிகளில் ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்து வருகிறது. அந்த வகையில் இந்த இரண்டு நாடுகளில் ஆப்பிள் தனது உற்பத்தியை தற்போது இருப்பதை விட அதிகப்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    ஐபோன்

    அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் தனக்கான உற்பத்தியை சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு மெல்ல மாற்றம் செய்யும் முடிவு எடுக்க இருக்கிறது. இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் விவகாரத்தில் சீனா ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து இருப்பதை காரணம் காட்டி சீனாவை உற்பத்திக்காக சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கும் மேற்கத்திய நிறுவனங்களையும் தங்களின் உற்பத்தியை சீனாவுக்கு வெளியில் மேற்கொள்ளச் செய்யும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், ஐபேட் மற்றும் மேக்புக் லேப்டாப் என 90 சதவீத சாதனங்கள் வெளி நிறுவன உற்பத்தியாளர்களால் சீனாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஷாங்காய் மற்றும் சீனாவின் இதர நகரங்களில் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு மேற்கத்திய நிறுவனங்களின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. 

    சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவை ஆப்பிள் தனது சாதனங்களை உற்பத்தி செய்ய சாதகமான சந்தையாக பார்க்கிறது. சீனாவை போன்றே இந்தியாவிலும் பெருமளவு உற்பத்தி பணிகளை மிக குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ள முடியும். சில உற்பத்தியாளர்களிடம் இந்தியாவில் உற்பத்தியை மேற்கொள்ள செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை ஆப்பிள் நிறுவனம் துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    ×