என் மலர்tooltip icon

    உலகம்

    VIDEO: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து - 13 பேர் உயிரிழப்பு
    X

    VIDEO: ஹாங்காங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் தீ விபத்து - 13 பேர் உயிரிழப்பு

    • அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    • தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானது

    ஹாங்காங் - தை போ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹாங்காங் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

    இந்த தீவிபத்தினால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சுமார் 700 பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த தீ விபத்தில் கட்டடங்கள் பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×