என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building accident"

    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அருகில் வசிக்கும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியியுள்ளனர்.
    • கட்டிடத்தின் 3 மாடிகளும் இடிந்து விழுந்துள்ளன.

    டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள வெல்கம் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

    இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிடத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அருகில் வசிக்கும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியியுள்ளனர்.

    மீட்பு பணிகளில் ஒரு ஆன் மற்றும் ஒரு பெண்ணின் உடல் மீட்க்கப்பட்டது. மேலும் ஒரு வயது குழந்தை உட்பட 8 பேர் காய்நகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தின் 3 மாடிகளும் இடிந்து விழுந்துள்ளன.

    • இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
    • மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

    தலைநகர் டெல்லியின் வடகிழக்கில் உள்ள முஸ்தபாத் நகரில் இன்று அதிகாலை நான்கு மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

    அதிகாலை 2.30 மணியளவில் கட்டடம் இடிந்து விழுந்தது. தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), தீயணைப்பு வீரர்கள் மற்றும் டெல்லி காவல்துறையின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

    இடிபாடுகளுக்குள் சிக்கிய 14 பேர் மீட்கப்பட்டு ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அதில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

    மேலும் 12 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.
    • புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி வருகின்றனர்.

    தெலுங்கானாவில் கட்டுமானத்திலிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

    பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

    புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.
    • கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது.

    உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் சமீபத்தில் 100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.

    இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பஜார் வழியாக மக்கள் நடந்து செல்வதும், அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து, அந்த இடத்தில் புகை மேகம் சூழ்வது பதிவாகி உள்ளது.

    கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி அந்த நாய் உயிரிழந்தது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.     

    • ஜாகிர் நகர் பகுதியில் உள்ள 3 மாடி வீடு நேற்றைய தினம் மாலை 5.15 அளவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.
    • 24 எருமை மாடுகளும் உள்ளே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நேற்றைய தினம் மூன்று மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மீரட்டில் உள்ள ஜாகிர் நகர் பகுதியில் உள்ள 3 மாடி வீடு நேற்றைய தினம் மாலை 5.15 அளவில் குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்துள்ளது.

    இதில் 15 உள்ளேயே சிக்கிக்கொண்ட நிலையில் ஜேசிபி உள்ளிட்டிட இயந்திரங்கள் கொண்டு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  15 பேறும் மீட்கப்பட்ட நிலையில் அதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சாஜித் (40), அவரின் மகள் சானியா(15), மகன் சாகிப்(11), ஒன்றரை வயதான சிம்ரா, 7 வயதான ரீசா, 63 வயதான நாபோ, 20 வயதான பர்கானா, 18 வயது பெண் ஆலிசா, 6 வயது சிறுமி ஆலியா ஆகியோர் உயிரிழந்தவர்களில் அடங்குவர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டடத்தின் உரிமையாளர் அங்கேயே மாட்டுத் தொழுவமும் வைத்திருந்த நிலையில் 24 எருமை மாடுகளும் உள்ளே சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    குஜராத்தில் கட்டுமானப்பணியின்போது சுவர் இடித்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜசல்பூர் பகுதியில் காடி என்று இடத்தில் தனியார் தொழிற்சாலையின் கட்டுமானப் பணி நடைபெற்று வந்தது.

    நிலத்துக்கு அடியில் தொட்டி அமைக்க தொழிலாளர்கள் சிலர் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மண்சுவர் இடிந்து விழுந்ததில் பணியில் இருந்த தொழிலாளர்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். இன்று மதியம் மதியம் 1.45 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 10 தொழிலாளர்களில் 6 பேர் உயிரிழந்தனர்.

    மற்றவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது.

    • சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான அந்த கட்டடம் 150 வருட பழமையானது.
    • கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் சதார் பஜார் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்று நேற்றைய தினம் இடிந்து பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. கட்டடம் இடிந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு சிறுவர்கள் நொடியில் உயிர் தப்பிய பரபரப்பூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

    சதார் பஜாரில் ஜைன சமூக அறக்கட்டளைக்குச் சொந்தமான சுமார் 100 முதல் 150 வருட பழமையான அந்த கட்டடம் ஏற்கனவே சிதிலமடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 6-7 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் அந்த கட்டடம் உள்ள நடைபாதை வழியாக நடந்து வந்தனர்.

    அவர்கள் கடந்து சென்ற அடுத்த நொடியே கட்டடம் இடிந்து விழுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிறுவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிரிதப்பும் இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இன்று பிற்பகல் 2:39 மணியளவில் நடந்த இந்த விபத்து நடந்துள்ளது
    • குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள கன்னோஜ் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

    இன்று [சனிக்கிழமை] பிற்பகல் 2:39 மணியளவில் நடந்த இந்த விபத்தில் குறைந்தது 25 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப்படையினரால் ஆறு தொழிலாளர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    முதற்கட்ட தகவல்களின்படி, கட்டுமானத்தில் இருந்த கூரையின் ஷட்டர் இடிந்து விழுந்ததில் இந்த சம்பவம் நிகழ்ந்தது" என்று மாவட்ட மாஜிஸ்திரேட் (டிஎம்) சுப்ரந்த் குமார் சுக்ல் கூறினார்.

    • தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ட்ருஜிலோ.
    • நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

    தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷாப்பிங் மால் கூரை இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    தலைநகர் லிமாவிலிருந்து வடக்கே சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான ட்ருஜிலோவில் உள்ள ரியல் பிளாசா ஷாப்பிங் மாலில் இந்த விபத்து நடந்திருக்கிறது.

    வெள்ளிக்கிழமை இரவு மாலில் உணவு அருந்தும் அரங்கத்தில் கனமான இரும்பு கூரை அங்கிருந்த மக்கள் மீது இடிந்து விழுந்தது. உடனே அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்து தொடர்பாக அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

    கூரை இடிந்து விழுந்ததில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் இறந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சர் வால்டர் அஸ்டுடிலோ நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார்.

    மொத்தம் 78 பேர் காயடைந்தனர், அதில் 30 பேர் ஏற்கனவே சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 48 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் மூன்று பேரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

    இடிந்து விழுந்த கூரையின் பரப்பளவு 700 முதல் 800 சதுர மீட்டர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. எனவே 100க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடிபாடுகளுக்குள் தேடுதல் பணியில் எஈடுபட்டுள்ளனர்.  

    துரைப்பாக்கத்தில் ஏ.சி.யை பழுது பார்த்தபோது 7-வது மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    சோழிங்கநல்லூர்:

    துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்னை ஒன் ஐடி நிறுவனம் உள்ளது. இங்கு 7-வது மாடியில் ஏ.சி.யை பழுது பார்த்து புதியதாக மாற்றும் வேலை நடந்தது.

    துரைபாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் உள்பட 4 பேர் ஏ.சி. பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது 7-வது மாடியில் இருந்து பிரகாஷ் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பாலக்காடு ரெயில் நிலையம் அருகே 3 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண்கள் உள்பட 10 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான 3 அடுக்குமாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் ஓட்டலும், கீழத்தளத்தில் பேக்கரி, லாட்டரி உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வருகிறது.

    60 வருட பழமையான கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. இந்த பணியில் வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    நேற்று மதியம் மேல் மாடியில் உள்ள ஒரு தூணை மாற்றும் வேலையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தூணை அகற்றியபோது கட்டிடத்தின் மேல்மாடி வலுவிழுந்தது. இதனால் கட்டிடம் இடிந்து விழுந்தது.

    இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்கள் அலறி சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

    இது குறித்து தகவல் கிடைத்தும் கலெக்டர் பாலமுரளி, எஸ்.பி. தேபேஸ்குமார் பெகரா மற்றும் பாலக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 7 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள், மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் என மொத்தம் 45 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத தூண்கள் அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதனையடுத்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு இடிபாடுகளில் சிக்கிய ஜான் (வயது 51), ஜெகதீஷ் (57), பிரவீனா (20), சாலினி (30), சித்தார்த் (28), சுனில் (43), ஷாபி (29), ராமன் (38), ‌ஷமீர் (28), உஷா (28) ஆகிய 10 பேரையும் படுகாயத்துடன் மீட்டனர். 3 பெண்கள் உள்பட 10 பேரையும் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×