search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rescue Team"

    • கட்டிட இடுபாடில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செய்து காட்டினர்
    • நிலநடுக்கத்தின் போது அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்

    வேலூர்:

    தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் வி.ஐ.டி பல்கலைக பேரிடர் மீட்பு குழு ஆகியவை இணைந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எவ்வாறு காப்பது என்ற போலி ஒத்திகை பயிற்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். தேசிய பேரிடர் மீட்புக் குழு துணை கமாண்டர் சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார். நிலநடுக்கத்தில் கட்டிட இடுபாடில் மாணவர்கள் சிக்கிக் கொண்டால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று பேரிடர் மீட்பு குழுவினர் போலி ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் மாணவர்களை காப்பாற்றினர். மேலும் இந்த நிலநடுக்கத்தின் போது பேரிடர் மீட்பு குழு, மருத்துவ குழு, தீயணைப்பு குழு, பொதுப்பணித்துறை, ஆம்புலன்ஸ் ஆகிய துறைகள் இணைந்து செயல்பட வேண்டும் என அதிகாரிகள் கூறினர்.

    அவ்வாறு இணைந்து செயல்பட்டால் தான் பேரிடரில் இருந்து மக்களை உயிருடன் காப்பாற்றலாம் என்றனர்.

    • மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர், கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல், தற்போது காரைக்காலுக்கு தென்கிழக்கே 500 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 580 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு குறைந்த வேகத்தில் நகர்ந்துவருவதால், கடல் சீற்றம், தரைகாற்று அதிகம் இருக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்கு ஏற்றார்போல், காரைக்கால் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

    காரைக்கால் மாவட்டத்தைச்சேர்ந்த காரைக்கால் மேடு, கிளிஞ்ச ல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்டபத்தூர், திரு.பட்டினம் பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவகிராமத்தைச்சேர்ந்த சுமார் 15 ஆயிரம் மீனவர்கள் நேற்று 3ம் நாளாக கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீனவர்கள் விசை ப்படகுகள் காரைக்கால் மீன்பிடிதுறைமுகத்திலும், பைபர் படகுகள் காரைக்கால் அரசலாற்றங்கரையோரம் மற்றும் மீனவ கிரா மங்களிலும் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

    காரைக்கால் தனியார் துறைமுகத்தில், 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் உத்தரவுப்படி, காரைக்கால் வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு க்குழுவினர், பிரதீப்குமார் தலைமையில், முன் எச்சரிக்கை நடவடி க்கையாக, காரைக்கால் கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடற்கரையில் உள்ள மீனவர்களிடம் புயல் குறித்து எச்சரிக்கை விடுத்து, மீனவ கிராமங்களில் உள்ள படகுளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்ல வலியுறுத்தினர். மேலும், பொதுமக்கள் மழை மற்றும் புயல் நேரங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    கோவையில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் தலைச்சுமையாக 70 கி.மீட்டர் தூக்கி சென்று தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கினர். #KeralaRain #KeralaFloods
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெல்லியாம்பதி உள்ளது. மலைப்பகுதியான இங்கு தேயிலை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள். பரம்பிக்குளம், வால்பாறைக்கு இங்கிருந்து பொருட்கள் வாங்க நடந்தே வந்து விடும் தூரமே உள்ளது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த பேய் மழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் கடந்த 7 நாட்களாக இல்லாமல் தோட்டத்தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

    நிவாரணப்பொருட்களை சமவெள்ளப்பகுதிக்கு கொண்டு செல்லவே கடினமாக இருக்கும் சூழலில் மழை பகுதிக்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.



    இந்நிலையில் கோவையில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் தலைச்சுமையாக 70 கி.மீட்டர் தூக்கி சென்று நெல்லியாம்பதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 7 நாட்களுக்கு மேல் பசி, பட்டினியால் தவித்த குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர். தலைசுமையாக 70 கி.மீட்டர் தூரம் நடந்தே வந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பொதுமக்களுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் பழம்புழகோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சதீஷ் என்பவரும் 70 கி.மீட்டர் நடந்தே சென்று நெல்லியாம்பதி மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.  #KeralaRain #KeralaFloods

    ×