search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு சென்ற மீட்பு குழுவினர்.
    X
    தோட்ட தொழிலாளர்களுக்கு நிவாரணப்பொருட்களை கொண்டு சென்ற மீட்பு குழுவினர்.

    போக்குவரத்து துண்டிப்பு - நிவாரணப்பொருட்களை தலைச்சுமையாக கொண்டு சென்ற மீட்பு குழுவினர்

    கோவையில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் தலைச்சுமையாக 70 கி.மீட்டர் தூக்கி சென்று தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கினர். #KeralaRain #KeralaFloods
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெல்லியாம்பதி உள்ளது. மலைப்பகுதியான இங்கு தேயிலை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள். பரம்பிக்குளம், வால்பாறைக்கு இங்கிருந்து பொருட்கள் வாங்க நடந்தே வந்து விடும் தூரமே உள்ளது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த பேய் மழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் கடந்த 7 நாட்களாக இல்லாமல் தோட்டத்தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

    நிவாரணப்பொருட்களை சமவெள்ளப்பகுதிக்கு கொண்டு செல்லவே கடினமாக இருக்கும் சூழலில் மழை பகுதிக்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.



    இந்நிலையில் கோவையில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் தலைச்சுமையாக 70 கி.மீட்டர் தூக்கி சென்று நெல்லியாம்பதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 7 நாட்களுக்கு மேல் பசி, பட்டினியால் தவித்த குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர். தலைசுமையாக 70 கி.மீட்டர் தூரம் நடந்தே வந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பொதுமக்களுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் பழம்புழகோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சதீஷ் என்பவரும் 70 கி.மீட்டர் நடந்தே சென்று நெல்லியாம்பதி மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.  #KeralaRain #KeralaFloods

    Next Story
    ×