search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relief materials"

    கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயில்களில் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaCycloneReliefMaterials #EdappadiPalaniswami #RailwayMinistry
    புதுடெல்லி:

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்  மூலம் நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர். சிலர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றனர்.

    இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பினார்.  அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 10-ம் தேதி வரை கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயில்களில் தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaCycloneReliefMaterials #EdappadiPalaniswami #RailwayMinistry
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சேலத்தில் இருந்து 3 லாரிகளில் நிவாரண பொருட்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சேலம்:

    கஜா புயல் நேற்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. கரையை கடந்த கஜா புயலை அடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால்  பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் குறித்து எச்சரிக்கை விடப்பட்டு இருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது.



    இந்த நிலையில், கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு பல்வேறு துறைகள், சங்கங்கள் வழியே ரூ.22 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

    இவற்றில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் விரிப்பு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய 3 லாரிகளை முதல் அமைச்சர் பழனிசாமி சேலத்தில் இருந்து கொடி அசைத்து அனுப்பி வைத்துள்ளார்.  இவை உடனடியாக கொண்டு செல்லப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ள மற்றும் தேவையான மக்களுக்கு விநியோகிக்கப்படும்.#GajaCyclone #EdappadiPalanisamy
    வீ.கே. புதூர் தாலுகா மக்கள் சார்பில் கேரளா மக்களுக்கு நிவாரண பொருட்களை தாசில்தார் அனுப்பி வைத்தார்.

    சுரண்டை:

    நெல்லை மாவட்ட கலெக்டரின் வேண்டுகோளின் படி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு வீ.கே.புதூர் தாலுகா சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க வீ.கே. புதூர் தாசில்தார் நல்லையா கேட்டுக்கொண்டார். அதன்படி வீ.கே. புதூர் தாலுகா மக்களின் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

    அதன்பேரில் பொது மக்கள் அரிசி, கோதுமை மாவு, மைதா, ரவை, குடிநீர் பாட்டில்கள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப், பவுடர், கொசுவர்த்தி சுருள், கொசு விரட்டி, மெழுகு வர்த்தி, தீப்பெட்டி, தலையணை, போர்வை, டீத்தூள், காபித் தூள், பால் பவுடர், சானிடரி நாப்கின், துணிகள், நிலக்கடலை, பயறு வகைகள், தேங்காய் எண்ணெய், ரஸ்க், பிஸ்கட், டார்ச், பேட்டரி ஆகிய பொருட்களை (பயன்படுத்திய ஆடைகளை தவிர்த்து) வீ.கே.புதூர் தாலுகா அலுவலகத்தில் வந்து நேரில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தாராளமாக வழங்கினர்.

    அதனை தாசில்தார் நல்லையா நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தார். கலெக்டர் அலுவலகம் மூலமாக அவை கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை புதுவை பா.ஜனதா சேகரித்து வழங்கியது.
    புதுச்சேரி:

    கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவை பா.ஜனதா கட்சியின் தூய்மை இந்தியா குழு மற்றும் பேரிடர் மேலாண்மை குழு இணைந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இருந்து பொருட்களை சேகரித்து செல்கின்றனர்.

    இக்குழுவின் தலைவராக அகிலன் மற்றும் சோழராஜன் செயல்பட்டு ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., கொடி அசைத்து வழி அனுப்பினார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் தங்க. விக்ரமன், ரவிச்சந்திரன், சங்கர், துணை தலைவர் செல்வம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    மேலும் இக்குழுவினருடன் நாகேஸ்வரன், வடிவேல், கணபதி, வேலு, ஸ்ரீநிவாசன், திரிபுரசுந்தரி, கவிதா, ரமேஷ், ஜான் கென்னடி, கர்ணன், சிவ செந்தில், பாலபாஸ்கர், குமார், கலையரசன், வேணுகணேஷ், ஆனந்த பாஸ்கர் மற்றும் பலரும் கேரளா சென்றுள்ளனர்.


    வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரளா மாநில மக்களுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கலெக்டர் விஜயலட்சுமி 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத்தார்.
    அரியலூர்:

    வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளான கேரளா மாநில மக்களுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ரூ.13 லட்சம் மதிப்புள்ள உடைகள், போர்வைகள், மெழுகுவர்த்தி, பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள், மருந்து பொருட்கள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களான நிவாரண பொருட்களை கலெக்டர் விஜயலட்சுமி 2 லாரிகள் மூலம் அனுப்பி வைத் தார். 

    அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட வழங்கல் அதிகாரி ஜெயா, தாசில்தார் (பேரிடர் மேலாண்மை) விக்டோரியா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். #keralarain
    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
    கோவை:

    கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    கோவை கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது. அரிசி, பருப்பு, மாத்திரைகள், குடிநீர் பாட்டில்கள், துணிமணிகள், போர்வை, ஹார்லிக்ஸ் உள்ளிட்ட ரூ. 8 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் கணபதி சிவக்குமார், பச்ச முத்து, சொக்கம்புதூர் கனகராஜ், சவுந்திர குமார், வக்கீல் கருப்புசாமி, காந்த குமார், கேபிள் வினோத், கு.பே.துரை, துரை ராஜ், பாசமலர் சண்முகம்,

    செல்வபுரம் ஆனந்த், கார்த்திக், பரமசிவம், சிங்கை ஜவஹர்.மகளிர் அணி மாவட்ட தலைவி உமா மகேஸ்வரி, சிவகாமி, திலகவதி, மஞ்சுளா, மல்லிகா, தமிழ் செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களின் பெருந்துயர் களைய நிவாரண பொருட்கள் வழங்க பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களின் பெருந்துயர் களைய இயன்ற உதவி செய்திட பெரம்பலூர் மாவட்ட மக்கள் பெரும் பங்காற்றிட வேண்டுகிறேன். அவர்களுக்கு உதவிட தாங்கள் தங்களால் இயன்றவரை நிவாரண பொருட்களை மாவட்ட கலெக்டர் அலு வலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலக தாசில்தாரிடம் வழங்கிட கேட்டுக்கொள் கிறேன். கேரள மக்களுக்கு உதவிட நமது மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நிவாரண பொருட்களை பெற தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை. எனவே அதுபோன்று அணுகுவோரை தவிர்த்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் பேரிடர் வேலாண்மை அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு வேட்டி, சேலை, நைட்டி, துண்டு மற்றும் ஆண், பெண், குழந்தைகள் பயன் படுத்தும் வகையிலான துணி வகைகள், அரிசி, பருப்பு வகைகள், பிஸ்கட், தண்ணீர் பாட்டில்கள், ரொட்டி வகைகள், டீ, காபி, மசாலா பொருட்கள், சர்க்கரை, உப்பு, தேங்காய் எண்ணெய், மெழுகுவர்த்தி, டார்ச், பேட்டரிகள், தீப்பெட்டி, வாளிகள், குவளைகள், பேஸ்ட், பிரஸ், மருந்து வகைகள், பால் பவுடர், ஸ்டவ் அடுப்பு போன்ற நிவாரணப் பொருட்களை வழங்கிடவும். பயன்படுத்திய பழைய பொருட்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும் கூடுதல் தகவல்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை துறையின் இலவச தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 04328-224455 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFlood #GST #CustomsDuty
    புதுடெல்லி:

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 கோடியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ரூ.100 கோடியும் நிதி உதவி அறிவித்தனர். இந்த ரூ.600 கோடி நிதியை கேரள அரசுக்கு நேற்று மத்திய அரசு விடுவித்தது. இத்தகவலை மத்திய அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.



    மேலும், வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வந்த நிவாரண பொருட்கள் மீது சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி.யை ரத்து செய்வது என்றும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல், திருச்சூர், பாலக்காடு, கொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 சுங்கச்சாவடிகளில் 26-ந் தேதி வரை, கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.  #KeralaFlood #GST #CustomsDuty  #tamilnews
    திருப்பூரில் இருந்து கேரளாவுக்கு நிவாரணப்பொருட்களை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். #keralarain

    திருப்பூர்:

    திருப்பூர், பல்லடம் சாலையில் அமைந்துள்ள ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தலைமையில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் அனுப்பி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது,

    திருப்பூர் மாவட்டத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்களை கேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்களுக்கு தேவையான 1435 கிலோ அரிசி, 60 பெட்டி தண்ணீர் பாட்டில்கள், 50 கிலோ துவரம்பருப்பு, உயிர்காக்கும் மருந்துகள் ,பால் பவுடர், பற்பசை, போர்வைகள், சானிட்டரி நாப்கின்கள், பிஸ்கட்டுகள் மற்றும் பாக்குமட்டையிலான தட்டுக்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் போர்கால அடிப்படையில் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும், காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தேங்காய் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் திருப்பூர் மாவட்ட ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் மூலமாக டீ-சர்ட்டுகள் மற்றும் ஆடைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கோவை மாவட்டத்திலிருந்து கேரளா மாநிலத்தில் உள்ள கால்நடைகளுக்கு முதற்தட்டமாக ரூ.10 லட்சம் மதிப்பிலான தடுப்பூசிகள், தீவனம் மற்றும் சத்து மருந்துகள் அனுப்பிவைக்கப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத் திலுள்ள பொதுமக்கள் அதிகளவில் கேரளா மாநிலத்திற்கு நிவாரணப் பொருட்கள் வழங்கு வதற்கு முன்வந்து பல்லடம் சாலையில் அமைந்துள்ள ராமசாமி முத்தம் மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தில் வழங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

    மேலும், திருப்பூர் மாவட்டத்தின் மூலமாக ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அதன் ஒரு பகுதியாக ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் போது சட்டமன்ற உறுப்பினர்கள் சு.குணசேகரன் (திருப்பூர் தெற்கு), கரைப்புதூர் நடராஜன்(பல்லடம்), மாநகர காவல் துணை ஆணையர் உமா, மாவட்ட வருவாய் அலுவலர்பிரசன்னா ராமசாமி, முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், திருப்பூர் சப்- கலெக்டர் ஷ்வரன் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜன், உடுமலைபேட்டை வருவாய் கோட்டாட்சியர் அசோகன் மற்றும் துணை கலெக்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். #keralarain

    கோவையில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் தலைச்சுமையாக 70 கி.மீட்டர் தூக்கி சென்று தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கினர். #KeralaRain #KeralaFloods
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நெல்லியாம்பதி உள்ளது. மலைப்பகுதியான இங்கு தேயிலை விவசாயம் நடைபெறுகிறது. இங்கு ஏராளமான தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எஸ்டேட் உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள். பரம்பிக்குளம், வால்பாறைக்கு இங்கிருந்து பொருட்கள் வாங்க நடந்தே வந்து விடும் தூரமே உள்ளது.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த பேய் மழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் கடந்த 7 நாட்களாக இல்லாமல் தோட்டத்தொழிலாளர்கள் தவித்து வருகிறார்கள்.

    நிவாரணப்பொருட்களை சமவெள்ளப்பகுதிக்கு கொண்டு செல்லவே கடினமாக இருக்கும் சூழலில் மழை பகுதிக்கு பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.



    இந்நிலையில் கோவையில் இருந்து சேகரிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பேரிடர் மீட்பு குழுவினர் 30 பேர் தலைச்சுமையாக 70 கி.மீட்டர் தூக்கி சென்று நெல்லியாம்பதிக்கு கொண்டு சென்றனர். அங்கு 7 நாட்களுக்கு மேல் பசி, பட்டினியால் தவித்த குழந்தைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினர். தலைசுமையாக 70 கி.மீட்டர் தூரம் நடந்தே வந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிய பேரிடர் மீட்பு குழு மற்றும் பொதுமக்களுக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

    இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் பழம்புழகோடு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சதீஷ் என்பவரும் 70 கி.மீட்டர் நடந்தே சென்று நெல்லியாம்பதி மக்களுக்கு சிகிச்சை அளித்தார்.  #KeralaRain #KeralaFloods

    மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு விருதுநகர்-ராமநாதபுரத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. #keralarain

    ராமநாதபுரம்:

    கேரளாவில் ஏற்பட்டுள்ள மழை, வெள்ளத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு வியாபார சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் சேகரிக்கப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    நிவாரணப் பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனத்தை கலெக்டர் நடராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் செயல்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு பிரிவில் சேர்க்கப்பட உள்ளது.


    இதேபோல் விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, கோதுமை, பால் பவுடர் மற்றும் ரூ.5ம லட்சம் மதிப்பிலான அத்தியாவசியப்பொருட்கள் லாரி மூலம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கலெக்டர் சிவஞானம் கொடியசைத்து அந்த வாகனத்தை அனுப்பி வைத்தார். #keralarain

    கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நீலகிரியில் இருந்து வயநாட்டிற்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன #KeralalRain
    ஊட்டி:

    கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம் உள்பட பல்வேறு மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால், அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதையொட்டி வயநாடு மாவட்ட கலெக்டர் அஜய்குமார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குமாறு நீலகிரி மாவட்ட கலெக்டரிடம் கேட்டுக்கொண்டார்.

    இதையடுத்து நீலகிரி மாவட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்பு சார்பில் கேரட், பீட்ரூட் உள்பட 3 டன் காய்கறிகள், பருப்பு, அரிசி, வேட்டி, சட்டை போன்றவை ஊட்டி பிங்கர்போஸ்ட்டில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் வைத்து ஒரு லாரியில் ஏற்றப்பட்டது. ஊட்டி நகராட்சி மற்றும் சமூக நலத்துறை சார்பில் நாப்கின்கள், குழந்தைகளுக்கான ஆடைகள், டி-சர்ட்டுகள், பேண்ட்கள், சோப்பு, அரிசி, பால் பவுடர், பிஸ்கட், ரொட்டி, ஜாம், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவை ஏற்றப்பட்டன. ஊட்டி தங்க நகை வியாபாரிகள் சார்பில் சரக்கு வாகனங்களில் கம்பளி ஆடைகள், ரெடிமேடு ஆடைகள், போர்வை, படுக்கை, மருந்து, மாத்திரைகள் ஆகியவை வயநாடு மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

    தோட்டக்கலைத்துறை பணியாளர்கள் மூலம் ரூ.25 ஆயிரம் நிவாரண உதவியாக வயநாடு கலெக்டருக்கு அனுப்பப்பட்டது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மேற்கண்ட பொருட்களை பார்வையிட்டு அனுப்பி வைத்தார். அப்போது தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரவி, சமூகநல அலுவலர் தேவகுமாரி உள்பட பலர் உடனிருந்தனர்.  #KeralalRain 
    ×