என் மலர்
நீங்கள் தேடியது "Kerala rain"
- வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.
- அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களிலேயே தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் அதிகனமழை எச்சரிக்கை காரணமாக நாளை 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாலக்காடு, இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
- நிலைசரிவு ஏற்பட்டுள்ள சாலையை சீர் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மூணாரில் இருந்து தேனிக்கு செல்லும் சாலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நிலைசரிவு ஏற்பட்டுள்ள சாலையை சீர் செய்யும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. விரைவில் இப்பகுதியில் போக்குவரத்து சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.
இந்நிலையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடுக்கி மற்றும் எர்ணாகும் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், காஞ்சிரப்பள்ளி மற்றும் மீனாச்சில் ஆகிய 3 தாலுக்காக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோட்டம் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
பத்தனம்திட்டாவில் மணிமாலா மற்றும் பம்பா, காசர்கோட்டில் மொக்ரல் மற்றும் கொல்லத்தில் பள்ளிக்கல் உள்ளிட்ட பல ஆறுகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளுக்கு அப்பால் ஜூலை 27-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான வெப்பமண்டல புயல் விபா காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலவீனமடைந்துள்ள சூறாவளி புயல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்காள விரிகுடாவில் நுழையும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என்பதால் இந்த 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 15 மற்றும் 16-ந் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் வருகிற 18-ந் தேதி வரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் பலத்த காற்று வீசும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (14-ந் தேதி) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 15 மற்றும் 16-ந் தேதிகளில் பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் 16-ந் தேதி வரை கேரள கடற்கரை முழுவதும் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் இந்த காலத்தில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.
பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
கோழிக்கோடு மற்றும் கணணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
- வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக இந்த மாதமே தொடங்கிவிட்டது. இதை யடுத்து மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.
வயநாடு, கோழிக்கோடு, பாலக்காடு, கண்ணூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதன் காரணமாக பல இடங்களில் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன.
மாநிலம் முழுவதும் இயல்பை விட அதிக ளவு மழை பெய்து இருக்கிறது. வழக்கமாக எதிர்பார்க்கப்படும் மழையளவு 69.6 மில்லிமீட்டர் மழையாகும். ஆனால் கடந்த ஒரு வாரத்தில் 395.5மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்குவதற்காக 50-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு 1,900பேர் தங்கியிருக்கின்றனர்.
கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரள மாநில மின்சார வாரியத்தின் கீழ் உள்ள அணைகளின நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 16 முக்கிய அணைகளின் மொத்த நீர் இருப்பு 40 சதவீதமாக இருக்கிறது. அனைத்து அணைகளின் நீர் இருப்பும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறிய அளவிலான 12 அணைகளில் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் பல மாவட்டங்களில் நாளை வரை தீவிரத்தன்மை கொண்ட மழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றும் பல மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், வருகிற 3-ந்தேதி வரை வெவ்வேறு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் நிலச்சரிவும், ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கேரள மாநிலத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைந்துள்ளது. முக்கியமாக தமிழகத்தில் இருந்தும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒரு குழு கேரளா சென்றிருக்கும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்றுள்ளனர்.
அவர்கள் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்களுடன் கொல்லம் மற்றும் இடுக்கி மாவட்டத்தில் முகாமிட்டு தயார் நிலையில் இருக்கின்றனர்.
- கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கனமழை பெய்து வருகிறது.
- கனமழை காரணமாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது. இன்றும் பல மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கண்ணூர், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பத்தினம்திட்டா, காசர்கோடு ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலார்ட்" விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் கேரளாவில் வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நாளை (மே 27) அதிதீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மலப்புரம், திருச்சூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2009-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 23-ந்தேதி தொடங்கியது.
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் தமிழகத்திலும் மழை பெய்யும்.
திருவனந்தபுரம்:
தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 4 நாட்கள் முன்னதாக மே 27-ந்தேதியே தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 23-ந்தேதி தொடங்கியது. அதன்பிறகு வந்த ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டி தொடங்கவில்லை.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் தமிழகத்திலும் மழை பெய்யும். இதனால் தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டை பொறுத்தவரை விவசாயத்துக்கு பருவமழை மிகவும் முக்கியமானதாகும். தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
- வங்க கடலில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் பல மாவட்டங்களிலும் தற்போது மழை பெய்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக குறிப்பிட்டு உள்ளது.
இதன் காரணமாக வருகிற 4-ந் தேதி வரை கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
இதுபோல வங்க கடலில் சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி கேரள கடல் பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பி வருகிறார்கள்.
- மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
- கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு உஷார் நிலையில் இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மலையோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வருகிற 11-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
குறிப்பாக மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் அப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதை தொடர்ந்து கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு உஷார் நிலையில் இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.
- கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
- கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
திருவனந்தபுரம்:
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் தொடங்கும். கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
வழக்கமாக இதற்கான அறிகுறிகள் அனைத்தும் அந்தமான் மற்றும் லட்சத்தீவு பகுதியில் தென்படும். இந்த ஆண்டு இதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருந்தது. இதனால் தென்மேற்கு பருவமழை தாமதமாகும் எனக்கூறப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும், லட்சத்தீவு மற்றும் அந்தமான் தீவுகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மழை தென்னிந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா பகுதியிலும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளிலும் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் மற்றும் நிக்கோ பார் தீவுகள், அந்தமான் கடல் பகுதியிலும் சூறைக்காற்றும், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.






