என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் வருகிற 11-ந்தேதி வரை இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கேரளாவில் வருகிற 11-ந்தேதி வரை இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு

    • மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
    • கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு உஷார் நிலையில் இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மலையோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வருகிற 11-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    குறிப்பாக மலையோர மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் அப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    இதை தொடர்ந்து கேரளாவில் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவு உஷார் நிலையில் இருக்கும் படி அரசு அறிவித்துள்ளது.

    Next Story
    ×