என் மலர்
நீங்கள் தேடியது "Heavy Rain"
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
- சேலம் மாநகரில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் லேசான தூறலுடன் நின்றதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. அதன் தொடர்ச்சியாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய மழை மாலை 6 மணி வரை என 2 மணி நேரம் கனமழையாக கொட்டியது. தொடர்ந்து இரவிலும் சாரல் மழையாக பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போல நேற்று மாலை ஓமலூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாநகரில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் லேசான தூறலுடன் நின்றதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 20.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஓமலூர் 12.4, மேட்டூர் 3.2, டேனீஸ்பேட்டை 2, சேலம் மாநகர் 0.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 53.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.
- குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது.
கோவை:
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பரவலாக மழை பெய்தது.
இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான காலநிலையே நிலவி வந்தது. நேற்றும் 2 மாவட்டங்களிலும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக மலைப்பகுதியை ஓட்டிய இடங்களில் மழை கொட்டியது.
இந்த நிலையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான காந்திபுரம், ரெயில் நிலையம், டவுன்ஹால், உக்கடம், சிங்காநல்லூர் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்ததால் வேலைக்கு செல்வோர், பள்ளி செல்லும் குழந்தைகள் சிரமம் அடைந்தனர்.
புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், சிறுமுகை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. மழையுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இந்த திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. நேற்று ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, காட்டேரி, சேலாஸ், கொலக்கம்பை, தூதூர்மட்டம், எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் குன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்தனர்.
குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் கடும் குளிரும் மக்களை வாட்டி வதைக்கிறது. சுற்றுலாவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலரும், கடும் குளிரால் வெளியில் வர முடியாமல் விடுதிகள், லாட்ஜ்களிலேயே முடங்கி போய் உள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரத்திலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் இன்று காலை பரவலாக மழை பெய்தது.
- கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
கோவை:
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள சாலையின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வந்தன.
வால்பாறை தேயிலை தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் தலையில் பிளாஸ்டிக் கவர்களை போட்டுக்கொண்டு வேலை பார்த்தனர். மேலும் பள்ளிக்கு சென்ற குழந்தைகள் குடைகளுடன் வீடு திரும்பியதை பார்க்க முடிந்தது.
வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் சாலையில், ஜே.ஜே. நகர் பகுதியில் நேற்று சாலையோரம் நின்றமரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டும் மழையிலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
கிணத்துக்கடவு பகுதியிலும் நேற்று காலை முதல் மதியம் வரை அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. பின்னர் மாலையில் திடீரென பலத்த மழை பெய்தது.
இதன்காரணமாக கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை மேம்பாலம் மற்றும் சர்வீஸ் ரோடுகளில் இருந்து மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள், பள்ளி குழந்தைகள் ஆகியோர் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள வடிகாலில் மழைநீர் செல்லாமல் மார்க்கெட் அருகே உள்ள சர்வீஸ் சாலையில் ஆறு போல வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதலே கடும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வாகனஓட்டிகள் முகப்பு விளக்கு மற்றும் திசை விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை சிரமத்துடன் இயக்கி வந்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழையுடன் கடும் குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
- மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான வெப்பமண்டல புயல் விபா காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலவீனமடைந்துள்ள சூறாவளி புயல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்காள விரிகுடாவில் நுழையும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என்பதால் இந்த 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாத தொடக்கத்தில் தீவிரம் அடைந்து அதன்பிறகு படிப்படியாக குறைந்தது. தற்போது மீண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அணைகள், அருவிகள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
கம்பம் அருகில் உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேகமலை பகுதியிலும் நேற்று இரவு முதல் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சின்ன சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிகளில் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 63.65 அடியாக உள்ளது. நீர்வரத்து 1466 கன அடி. நீர் திறப்பு 969 கன அடி. நீர் இருப்பு 4337 மி.கன அடி.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.80 அடியாக உள்ளது. வரத்து 921 கன அடி. திறப்பு 1419 கன அடி. இருப்பு 4654 மி.கன அடி.
மாவட்டத்தில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகாரிக்கும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
- தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வால்பாறை:
தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் சோலையாறு அணை உள்ளது. இந்த அணை 160 அடிய உயரம் கொண்டது.
கடந்த மாத இறுதியில் பெய்த மழை காரணமாக ஜூன் 1-ந்தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது.
பின்னர் மழை சற்று குறைந்ததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்து விட்டது. மேலும் மின் உற்பத்திக்கும், பரம்பிக்குளம் அணைக்கும் நீர் திறக்கப்பட்டதால் சோலையாறு அணையின் நீர்மட்டமும் குறைய தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டி வருகிறது.
குறிப்பாக சோலையார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 116.58 அடியாக இருந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 505 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 879 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து கனமழை பெய்தால் சோலையார் அணை விரைவில் தனது முழு கொள்ளளவை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடியாகும். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 92.20 அடியாக இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கவே அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 95.50 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 63 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மி.மீட்டரில் வருமாறு:
சின்னக்கல்லார்-75, சோலையார்-59, வால்பாறை பி.ஏ.பி-56, சின்கோனா, வால்பாறை தாலுகா-54, சிறுவாணி அடிவாரம்-23, பொள்ளாச்சி தாலுகா-11, ஆனைமலை தாலுகா-9, கிணத்துக்கடவு தாலுகா-8, மதுக்கரை தாலுகா-5 என மழை பெய்துள்ளது.
- பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இடையில் ஒரு சில நாட்கள் மட்டும் மழை குறைந்தநிலையில், தற்போது மீண்டும் அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு, பத்தினம் திட்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை கொட்டுகிறது.
பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு பொதுமக்களை மீட்டு வருகின்றனர். மழை காரணமாக பல மாவட்டங்களில் பொது மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வரும் நிலையில் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பாலக் காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், ஆலப்புழா, கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
காசர்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்கள், ஆலப்புழா மவட்டத்தில் குட்டநாடு மற்றும் அம்பலப்புழா தாலுகாக்களில் உள்ள தொழில்முறை கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
கோழிக்கோடு மற்றும் கணணூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டது. பலத்த மழை காரணமாக கொல்லம் அருகே உள்ள போலயாதோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கோவை வழியாக செல்லும் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
- நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சித்திரை சாவடி முதல் தடுப்பணையில் வெள்ளநீர் கரைபுரண்டு ஒடுகிறது.
வடவள்ளி:
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதிதீவிரமாக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அந்த வகையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டுகிறது.
இதன்காரணமாக கோவை வழியாக செல்லும் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் இரவு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
நொய்யலாற்று வழித்தடப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றங்கரையோரம் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இதற்கிடையே கோவையின் முக்கிய நதியாகவும், விவசாயிகள் வாழ்வாதாரமாகவும் உள்ள நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், சித்திரை சாவடி முதல் தடுப்பணையில் வெள்ளநீர் கரைபுரண்டு ஒடுகிறது.
நீண்ட நாட்களாக மழை இல்லாமல் வறண்டு காணப்பட்ட சித்திரைசாவடி தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் அழகை காண சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர்.
நொய்யல் ஆற்றில் வரும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் அந்த பகுதியில் தொண்டாமுத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை பகுதியிலும் கனமழை வெளுத்து வாங்குவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாக சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு, ஆழியார் கவியருவி ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வால்பாறையில் காலை 6:00 மணி வரை பெய்த மழைஅளவு விவரம் வருமாறு:-
வால்பாறை 51 மி.மீ., சோலையார் அணை-73 மி.மீ., சின்னக்கல்லார்-137 மி.மீ., சின்கோனா-95 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. மேலும் அதிகபட்சமாக சின்ன கல்லார் பகுதியில் 13 செ.மீ. மழை பெய்து உள்ளது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
- மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம், மைசூர், மாண்டியா மாவட்டங்கள், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
- வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்ததால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்தனர்.
அன்னூர்:
அன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று அன்னூர், கஞ்சப்பள்ளி, கரியாம்பாளையம், பொங்கலூர், கணேசபுரம், காட்டம்பட்டி, மசக்கவுண்டன் செட்டிபாளையம், பிள்ளையப்பம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இதில் கரியம்பாளையம் பகுதியில் எல்லப்பாளையம் அடுத்த காலனியில் சூறாவளி காற்றுடன் வீசிய கனமழைக்கு வீட்டின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. இதையடுத்து மழைநீர் வீடுகளுக்கு உள்ளேயே பெய்யத் தொடங்கியது.
இதனால் இப்பகுதி பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்தனர். இதேபோல் கணேசபுரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று விளம்பரத்திற்காக வைக்கப்பட்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனர் ஒன்று காற்றில் தூக்கி வீசப்பட்டு அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து மின் கம்பத்தின் மீது உரசி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பிளக்ஸ் பேனரை அப்புறப்படுத்தினர்.
மேலும் கணேசபுரம் சங்கீத் மில், கரியாம்பாளையம், நல்லிசெட்டிபாளையம், எல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளி காற்றுடன் வீசிய கனமழைக்கு சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
மேலும் கணேசபுரம், காட்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வீடுகளுக்குள் மழை நீர் நுழைந்ததால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்தனர். கனமழையின் காரணமாக அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் மின் ஒயர்கள் சேதமடைந்ததால் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
- வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும்.
- சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர்.
சென்னை:
சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
நேற்றும் இன்றும் மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டதால் வெளியூர் பயணத்தை மக்கள் தவிர்த்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் குறைந்து.
அரசு பஸ்கள் குறைந்த அளவிலான பயணிகளுடன் சென்றது. வார இறுதி நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) இல்லாத பிற நாட்களில் 800 அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இக்கப்பட்டன.
ஆம்னி பஸ்களை பொறுத்தவரையில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. வழக்கமாக சென்னையில் இருந்து 800 ஆம்னி பஸ்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும்.
ஆனால் பயணிகள் இல்லாததால் 350 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார். அதே போல வெளியூர்களில் இருந்தும் சென்னைக்கு நேற்று குறைந்த அளவில்தான் ஆம்னி பஸ்கள் வந்தன.
வழக்கமாக 330 ஆம்னி பஸ்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும். நேற்று 200 பஸ்கள் மட்டுமே வந்தன.
சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ததால் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதையும் ஒத்தி வைத்தனர். பலர் முன்பதிவு செய்த பயணத்தை ரத்து செய்தனர். அவசரமாக செல்ல வேண்டியவர்கள் மட்டுமே பஸ் பயணத்தை மேற்கொண்டனர்.
- செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது
- தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. சேலம் மாநகரில் நேற்று மாலை 6.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 10.30 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது.
புதிய பஸ் நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. மேலும் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது. சூரமங்கலம், அஸ்தம்பட்டி, கோரிமேடு, தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாநகரின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீர் தேங்கி நின்றது. சேலம் மாநகராட்சியின் பல்வேறு இடங்களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் புகுந்த தண்ணீரை விடிய, விடிய அகற்றினர்.
சேலம் மாநகராட்சி 26-வது வார்டு குப்தா நகர் 6 முதல் 9 குறுக்கு தெரு முழுவதும், சினிமா நகர், சின்னேரிவயக்காடு ஓடைஓரம் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாநகராட்சி கமிஷனர் ரஞ்சித் சிங், தி.மு.க. வார்டு செயலாளர் முருகன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை மீட்டு அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதே போல் சேலம் மாநகராட்சி 30-வது வார்டு பகுதியில் திருமணி முத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீர் கபிலர் தெரு, பாரதிதாசன் தெரு, போலீஸ் நிலையம் அருகில் உள்ள கந்தசாமி பிள்ளை தெரு, சோமபுரி தெரு, பங்களா தெரு, நந்தவனம் தெரு ஆகிய பகுதிகளிலும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களை போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மீட்டு நகரவை மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.
செவ்வாய்ப்பேட்டை மூலபிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் திருமணி முத்தாறு வெள்ளம் சூழந்தது. இதையடுத்து அந்த வீடுகளில் வசித்த பொதுமக்களை தீயணைப்பு துறையினர் மீட்டு கொண்டு வந்தனர்.
தொடர்மழை காரணமாக சேலம் அல்லிக்குட்டை ஏரி இரவு நிரம்பியது. இதையடுத்து அல்லிக்குட்டை மெயின் ரோடு பகுதியில் உள்ள வீடுகள், மன்னார்பாளையம் போயர் தெருவில் உள்ள வீடுகளுக்குள் ஏரி தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசித்த பொதுமக்கள் விடிய, விடிய தூங்காமல் கடும் குளிரில் அவதிப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏரியில் இருந்து வரும் தண்ணீரை வேறு வழியில் திருப்பிவிட வேண்டும் என வலியுறுத்தி அல்லிக்குட்டை பகுதியில் இன்று காலை சாலை மறியல் செய்தனர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதுபற்றி தெரியவந்ததும் வீராணம் போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து உடனடியாக வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதேபோல் மன்னார்பாளையம் பிரிவு ரோட்டிலும் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீர் இடுப்பளவுக்கு தேங்கி நின்றது. வயல் வெளிகளில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.






