என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு- சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
- மழை குறைந்து அருவிகளில் நீர்வரத்து சீரானதும் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பழைய குற்றால அருவியில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு தடை நீடிக்கிறது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மழை குறைந்து அருவிகளில் நீர்வரத்து சீரானதும் வழக்கம்போல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பழைய குற்றால அருவியில் தொடர்ந்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு தடை நீடிக்கிறது.
மற்ற அருவிகளான புலி அருவி, சிற்றருவி, ஐந்தருவியிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டாலும் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.






