என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஏற்காட்டில் 2 மணி நேரம் கொட்டிய கனமழை: குளிர்ச்சியான சீதோஷணத்தால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
- சேலம் மாநகரில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் லேசான தூறலுடன் நின்றதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது. அதன் தொடர்ச்சியாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஏற்காட்டில் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய மழை மாலை 6 மணி வரை என 2 மணி நேரம் கனமழையாக கொட்டியது. தொடர்ந்து இரவிலும் சாரல் மழையாக பெய்தது.
இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதே போல நேற்று மாலை ஓமலூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
சேலம் மாநகரில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் லேசான தூறலுடன் நின்றதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 20.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஓமலூர் 12.4, மேட்டூர் 3.2, டேனீஸ்பேட்டை 2, சேலம் மாநகர் 0.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 53.40 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.






